மூக்கை நோண்டி.. எலான் மஸ்க் மகன் செய்த சேட்டை! டென்ஷனான டிரம்ப் செஞ்ச காரியத்தை பாருங்க
நியூயார்க்: சமீபத்தில் டிரம்ப் அலுவலகத்திற்கு தனது 4 வயது மகனுடன் எலான் மஸ்க் வந்திருந்தார். அப்போது சிறுவன் டிரம்ப் பக்கத்தில் நின்றுக்கொண்டு மூக்கை நோண்டி சேட்டை செய்திருந்தார். இதனால் 145 ஆண்டுகள் பழமையான தனது டெஸ்க்கை டிரம்ப் மாற்றியிருக்கிறார்.
இந்த மாற்றம் தற்காலிகமானதுதான் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், அதற்காக பாரம்பரியமிக்க டேபிளை மாற்றுவதா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெள்ளை மாளிகை முழுவதும் அதிபருக்கானதுதான் என்றாலும், முக்கிய நபர்களை சந்திக்க ஓவல் ஆபிஸ்தான் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில்தான் சமீபத்தில் எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினரை டிரம்ப் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது மீடியாக்களின் அதிக கவனம் பெற்றிருந்தது, மஸ்க்கின் 4 வயது குழந்தை X Æ A-Xii தான். டிரம்ப் டேபிளுக்கு பக்கத்தில் நின்றுக்கொண்டு கூச்சலிட்டுக்கொண்டிருந்தான் சிறுவன்.
எல்லோரும் சிறுவன் x-ன் சேட்டையை ரசித்திருந்தனர். டிரம்ப் மௌனமாக இருந்தார். சேட்டையின் உச்சத்திற்கு சென்ற சிறுவன், தனது மூக்கை நோண்டியிருக்கிறான். இதனை டிரம்ப் ஓரக்கண்ணால் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். பையன் எங்கே நம் மீது தடவி விடப்போகிறானோ என்று பதட்டமடைந்திருக்கிறார். நோண்டி வெளியே எடுத்ததை எங்காவது தடவித்தானே ஆக வேண்டும். ஆனால் சிறுவன் அதை எங்கு தவினான் என்று தெரியவில்லை. ஒருவேளை டிரம்ப் அமர்ந்திருந்த டேபிளில் தடவியிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் கவனம் பெற்றிருந்தது. இப்படி இருக்கையில், டிரம்ப் தற்போது தனது டேபிளை மாற்றியிருக்கிறார். டிரம்ப் பயன்படுத்தி வந்த டேபிள் Resolute Desk என்று அழைக்கப்படுகிறது. அதாவது பிரிட்டிஷ் கப்பலான HMS Resolute-லிருந்து இந்த டேபிள் தயாரிக்கப்பட்டது. இதனை 1880ல் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா, அப்போதைய அமெரிக்க அதிபரான ஜனாதிபதி ரதர்ஃபோர்ட் பி. ஹேய்ஸுக்கு பரிசாக வழங்கியிருந்தார்.
பொதுவாக அமெரிக்க அதிபர்கள் ஓவல் அலுவலகத்தில் தங்களுக்கு எந்த டேபிள் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்காக 7 வகையான டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே மூக்கு நோண்டி தடவப்பட்டதாக சொல்லப்படும் Resolute Desk-ஐ தூக்கிவிட்டு, அதற்கு பதில் C&O Desk வைக்கப்பட்டிருக்கிறது. இந்த டேபிளுக்கும் பாரம்பரியம் இருக்கிறது. இதற்கு முன்னர் இருந்த அதிபர் புஷ் இந்த டேபிளைதான் பயன்படுத்தினார்.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், இந்த மாற்றம் தற்காலிகமானதுதான். Resolute Desk தூய்மைப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது புது பொலிவுடன் மீண்டும் திரும்ப வரும் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில், இப்படி ஒரு காரணத்திற்காக அதிபர் ஒருவர் தனது டேபிளை மாற்றியது இதுவே முதல்முறையாகும். மூக்கு நோண்டி சிறுவன் குறித்தும், டேபிளை பாலிஷ் செய்ய அனுப்பிய அதிபர் குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications