காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? வருத்தப்பட போறீங்க.. உக்ரைன் அதிபரை காலி செய்த அமெரிக்கா
நியூயார்க்: காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? என்று சூர்யவம்ச படத்தின் வசனம் போலத்தான் உலக அரசியல் மாறி உள்ளது. உக்ரைனை பாதுகாக்க ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் நடத்திய போருக்கு உதவி வந்த அமெரிக்கா அதே உக்ரைனை எதிர்க்க தொடங்கி உள்ளது. அதோடு பரம வைரியான ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருக்கமாகி உள்ளது. நெருங்கிய நண்பர்கள் போல் அடுத்தடுத்து இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். அதோடு நேற்று இரண்டு தரப்பு அதிகாரிகளும் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

உக்ரைன் அதிபர் விமர்சனம்
இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டிரம்ப் செய்தது பெரிய தவறு.. அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரஷ்யாவிற்கு புதிய பலத்தை கொடுக்கும். ரஷ்யா இதனால் நம்பிக்கையாக இருக்கும். இதனால் உக்ரைனுக்கும், நேட்டோ நாடுகளுக்கும்தான் ஆபத்து காத்திருக்கு.
ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே என்னிடம் பேசும் முன் டிரம்ப் புடினிடம் பேசியது தவறு. இப்போது என்னை சந்திக்கும் முன்பாக புடினை டிரம்ப் சந்திப்பது பெரிய தவறு, என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் எச்சரித்துள்ளார்.
துணை அதிபர் கண்டனம்
இதை அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கண்டித்துள்ளார். அமெரிக்க அதிபரை பற்றி தவறாக பேசுவதை ஜெலன்ஸ்கி நிறுத்த வேண்டும். ஜெலன்ஸ்கி அமெரிக்காவை குறைகூற கூடாது. அவர் இப்படியே பேசி வந்தால் ஜெலன்ஸ்கி கடுமையான பின்விளைவுகளை சந்திப்பார். அவர் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்று துணை அதிபர் ஜே டி வான்ஸ் கண்டித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் விமர்சனம்
முன்னதாக அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு எதிராக வைத்த விமர்சனத்தில், வெறும் காமெடியனாக இருந்த ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபரான பின்.. அமெரிக்க அரசை வறுபுறுத்தி 350 பில்லியன் டாலர் வரை செலவு செய்ய வைத்து உள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போர் தொடுக்க வற்புறுத்தியவர் செலன்ஸ்கி . வெல்லவே முடியாத ஒரு போரை தொடுக்க வைத்தார் செலன்ஸ்கி. இந்த போரை தொடங்கி இருக்கவே கூடாது. ஆனால் இதை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இதற்கு காரணம் செலன்ஸ்கி. அதோடு இல்லாமல் இந்த போருக்காக ஐரோப்பாவை விட 200 பில்லியன் டாலரை அதிகமாக அமெரிக்கா செலவு செய்துள்ளது. அதிலும் ஐரோப்பா செலவு செய்த பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும். ஆனால் அமெரிக்கா செலவு செய்த பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்காது. இந்த போரை நம்மை விட ஐரோப்பாவிற்கு முக்கியம்.
நமக்கும் உக்ரைனுக்கும் இடையே பெரிய கடல் உள்ளது. இந்த போர் நமக்கு முக்கியமே இல்லை. அதை விடுங்கள்.. நாம் அனுப்பிய பாதி பணத்தை காணவில்லை என்று உக்ரைன் அதிபர் பொய் சொல்கிறார். அவரை எப்படி நம்ப முடியும். இந்த போருக்காகவெல்லாம் பிடன் செலவு செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிலும் உக்ரைன் அதிபர் தேர்தலே நடத்தாமல் இருக்கிறார். தேர்தலே நடத்தாமல் உக்ரைன் அதிபர் சர்வாதிகாரி போல நடக்கிறார்.
உக்ரைன் அதிபர் முதலில் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தேர்தலை நடத்துவதற்கு ஒரு நாடே இருக்காது. இந்த போரை நாங்கள் நிறுத்துவோம். ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமாக பேசி வருகிறோம். அதை தொடருவோம். இந்த போரை எங்களால் மட்டுமே நிறுத்த முடியும். உக்ரைன் அதிபரின் தவறால் பல கோடி வீணாகிவிட்டது. பலர் பலியாகிவிட்டனர், என்று டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications