80 வயசிலும் 20 வயசு லுக்.. தினமும் 111 மாத்திரை சாப்பிடும் கோடீஸ்வரரின் "பயோ ஹேக்".. இவ்வளவு செலவா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நியூயார்க்கை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள தினமும் 111 மாத்திரைகளை சாப்பிடுவதாக செய்தி வெளியாகி உள்ளது.

பிரையன் ஜான்சன் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர். . மூளையின் செயல்பாட்டைக் கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமான கர்னல் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் இவர். 46 வயதாகும் இவர் உலக பணக்காரர்களில் பயோ ஹேக்கராக திகழும் ஒருவர்.

US Billionaire Bryan Johnson take 111 medicine with help of 30 doctors to stay young forever

பயோ ஹேக்கர்கள் என்றால்.. உடலின் பயாலஜியை ஹேக் செய்வது ஆகும். அதாவது உடலின் ஹார்மோன்களை மாற்றி அவர்களை இளமையாக வைப்பது, செல்களை புதுப்பித்து அவர்களின் அழகை அதிகரிப்பது, தோல் சிகிச்சைகளை செய்து பொலிவை, இளமையை அதிகரிப்பது, பல்வேறு கருவிகள் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற விஷயங்கள்தான் பயோ ஹேக் ஆகும்.

இந்த நிலையில்தான் பிரையன் ஜான்சன் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள 111 மாத்திரைகளை தினமும் உட்கொள்வதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் வருடா வருடம் 2 மில்லியன் டாலர் செலவு செய்கிறார். இதை அவரே டைம் ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார். உடலுக்கு பல்வேறு சப்ளிமென்டுகள் சாப்பிட்டு இவர் தன்னை இளமையாக வைத்துக்கொள்கிறார்.

அதேபோல் 20க்கும் அதிகமான கருவிகள் மூலம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் இவர் கண்காணித்து வருகிறாராம். இதன் மூலம் அவர் ஒவ்வொரு உறுப்புகளையும் கண்காணித்து அதன் பணிகளை மெருகேற்றி தன்னை இளமையாக வைத்துக்கொள்கிறாராம். 46 வயதாகும் இவர் 20 வயது தோற்றத்தில் இருக்கிறாராம்.

80 வயதானாலும் 20 வயது தோற்றத்தில் காட்சி அளிக்கும் திட்டத்தில் அவர் இந்த மருந்தை சாப்பிட்டு வருகிறாராம். அவர் ஒரு பேஸ்பால் தொப்பியை அணிந்துள்ளார், அது அவரது உச்சந்தலையில் சிவப்பு ஒளியை அடிக்கும். இதன் மூலம் மூளையின் செயல்பாட்டை கண்காணிக்கும். அதேபோல் தனது சொந்த மல மாதிரிகளை சேகரிக்கும் டாய்லெட் ஒன்றை வைத்துள்ளார்.

இதன் மூலம் அவரின் உடலில், குடலில் பாதிப்பு ஏற்பட்டால் கண்டுபிடிக்க முடியும். அதேபோல் அவரது இரவுநேர விறைப்புத்தன்மையை கண்காணிக்க அவரது ஆணுறுப்பில் ஒரு சிறிய ஜெட் பேக் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெட் பேக் மூலம் அவரின் விறைப்புத்தன்மை எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்து அவரின் ஆரோக்கியம் கண்டுபிடிக்கப்படும்.

இது போக இன்னும் பல கருவிகளை அவர் அணிந்துள்ளார். அதேபோல் anti-ageing algorithm என்ற பார்முலா மூலம் இவர் தொடர்ந்து ஒரு பார்முலாவை பின்பற்றி தனது ஒவ்வொரு உறுப்பிற்கும் சிறப்பு கவனம் மூலம் அழகை, இளமையை பராமரிக்கிறார். தற்போது இவர் தான் 18-20 வயது இளைஞராக உணர்வதாக கூறி உள்ளார்.

இவர் காலை 11 மணிக்குதான் இரவு உணவு சாப்பிடுவார் என்று கூறியுள்ளார். 3 வேளை சாப்பிடும் இவர் காலை உணவை மாலையில்தான் சாப்பிடுவாராம். தான் சாக கூடாது என்பதால் தனது காரை கூட 16 கிமீ வேகத்தில்தான் ஓட்டுவாராம். அதோடு இளமையாக இருக்க தனது டீன் ஏஜ் மகனின் ரத்தத்தை எடுத்து தனக்கு அடிக்கடி கொடுத்து வருகிறார்.

தினமும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து தலையின் செயல்பாட்டையும் கண்காணித்து வருகிறார். இந்த அனைத்து பணிகளையும் செய்ய இவர் 30 மருத்துவர்களை தனக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 3 ஆயிரம் கோடி சொத்து கொண்ட இவர் எப்போதும் இளைமையாக இருக்க இவ்வளவு பணிகளை செய்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+