'உளவு பார்க்க நாங்க எந்த பலூனையும் அனுப்பவில்லை'.. சீனாவின் குற்றச்சாட்டுக்கு.. அமெரிக்கா பதிலடி
ஜோ பைடன் சீனாவுக்கு வருவதாக எந்த தகவலும் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இது போலியாக பரப்பப்படக்கூடிய விஷயம் என்று சீன அதிகாரிகள் கூறியிருந்தனர்.
நியூயார்க்: சீனாவை வேவு பார்க்க உளவு பலூன்களை அனுப்பியிருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் மறுத்துள்ளார். உளவு பலூன் விஷயத்தில் அமெரிக்காவை சீனா குற்றம் சாட்டியிருந்த சில மணி நேரங்களிலேயே இந்த மறுப்பு செய்தி வந்திருக்கிறது.
அமெரிக்க வான் எல்லையில் சீனாவின் பலூன் ஒன்று மிதந்துக்கொண்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இதனை அமெரிக்க ராணுவம், போர் விமானத்தை கொண்டு சுட்டு வீழ்த்தியது. ஏற்கெனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை இந்த முரண்பாடுகளை மேலும் கூர்மையடைய செய்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவும்தான் எங்கள் நாட்டின் மீது உளவு பலூன்களை பறக்கவிட்டிருக்கிறது என்று சீனா குற்றம்சாட்டியது.
அதாவது சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், "அமெரிக்கா கடந்த 2022ம் ஆண்டு மட்டும் சுமார் 10 உளவு பலூன்களை எங்கள் நாட்டின் வான் எல்லையில் பறக்க வைத்திருக்கிறது. ஆனால் நாங்கள் இந்த பிரச்னையை சுமுகமான முறையில் எதிர்கொண்டோம்" என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து பலூன் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது இதற்கு அமெரிக்க தரப்பிலிருந்து மறுப்பு வந்திருக்கிறது.

பாதுகாப்பு கவுன்சில் மறுப்பு
அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், "சீனா மீது அமெரிக்காவின் உளவு பலூன்கள் பறந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என டிவிட்டரில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும், "அமெரிக்கா மீது சீன பலூன்களை பறக்கவிடுவது என்பது அந்நாட்டு உளவுத்துறையின் பிளான்களில் ஒன்று. இதன் மூலம் அமெரிக்கா மட்டுமல்லாது சுமார் 40 நாடுகள் 4 கண்டங்களின் இறையாண்மையை சீனா மீறியிருக்கிறது" என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையும் அதிகாரப்பூர்வமாக சீனாவின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.

வெளியுறவுத்துறையும் மறுப்பு
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், "அவர்கள் உளவு பலூன் விஷயத்தில் தொடர்ச்சியாக உண்மையை மறைத்து வருகிறார்கள். இது உளவு பலூன்தான், ஆனால் அவர்கள் இதனை வானிலையை கண்காணிக்க பயன்படுத்திய பலூன் என்று குறிப்பிடுகிறார்கள். அதேபோல எங்கள் நாட்டின் வான் எல்லையிலும், இதர நாட்டு வான் எல்லையிலும் அனுமதியின்றி ஊடுருவியிருப்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார்கள்" என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

பயணம்
இந்த பிரச்னைகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க மறுபுறம் அமெரிக்க மற்றும் கனடா நாட்டு வான் எல்லையில் தொடர்ந்து மர்மபொருட்கள் ஊடுருவி வருகின்றன. இதுவரை மூன்று மர்ம பொருட்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒன்று மட்டும் சீனாவுக்கு சொந்தமான பலூன். மற்ற இரண்டு என்ன என்பது குறித்து அமெரிக்கா இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. அதேபோல சீன பலூன் கடந்த 4ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 2 நாட்கள் ஜோ பைடன் அமெரிக்காவுக்கு செல்ல இருந்தார்.

பயணம் ரத்து
இந்த சம்பவத்தையடுத்து அவருடைய பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் சீனா தரப்பில் இந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் சீனாவுக்கு வருவதாக எந்த தகவலும் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இது போலியாக பரப்பப்படக்கூடிய விஷயம் என்று சீன அதிகாரிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications