சீனாவால் அலறும் அமெரிக்கா.. ரஷ்யா, வடகொரியா, ஈரானை விட ஆபத்து.. டிரம்புக்கு உளவுத்துறை வார்னிங்
நியூயார்க்: ரஷ்யா, ஈரான், வடகொரியாவை விட அமெரிக்காவின் பாதுகாப்புக்கு சீனா தான் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்த நாட்டின் உளவுத்துறை வார்னிங் செய்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யா இடையே ஏற்கனவே மோதல் உள்ள நிலையில் இந்த வார்னிங் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவும், சீனாவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் இடையே யார் பெரியவர் என்ற போட்டி உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு செல்வாக்கு உள்ளது. அதற்கு நிகராக வளர சீனா துடித்து வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து தனது திட்டத்தை அரங்கேற்றி வருகிறது இந்த சீனா.
சீனாவை போல் அமெரிக்காவுக்கு இன்னும் சில நாடுகள் அச்சுறுத்தலாக உள்ளன. அதாவது ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்டவை தான் அந்த நாடுகள். இதில் ரஷ்யா வல்லரசு நாடாகும். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓரளவு ரஷ்யாவுடன் நெருங்கி பழக தொடங்கி உள்ளார். அதேவேளையில் ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பிரச்சனை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

இப்படியான சூழலில் தான் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் சார்பில் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு (Annual Threat Assessment) அறிக்கை என்பது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்பது அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளை பட்டியலிட்டு காட்டுகிறது. அதில் ரஷ்யா, ஈரான், வடகொரியாவை விட சீனா தான் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக வார்னிங் செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில், ‛‛அமெரிக்காவுக்கு சீனா பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அமெரிக்காவை மிரட்டி பார்க்கும் பார்க்கும் வகையில் ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. அதேபோல் சைபர் பிரிவிலும் அச்சறுத்தலை தருகிறது. சீனா தனது எல்லைகளுக்கு அப்பால் சில பிரதேசங்களுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இந்த இடங்களை பாதுகாக்கவும், பசிபிக் பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் கூட்டு படையை சீன ராணுவம் உருவாக்கி வருகிறது.
குறிப்பாக பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையிலான பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவின் குவாம், ஹவாய் மற்றும் அலாஸ்கா உள்ளிட்ட இடங்கள் வரை நீண்டதூரம் பயணித்து தாக்கும் ஆயுதங்களை சீனா வடிவமைத்துள்ளது.
தற்போது சீனா என்பது ராணுவ நவீனமயமாக்கல், பன்முகப்படுத்துதல் மற்றும் அணுசக்தி திட்டங்களை விரிவுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை அம்சமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தொழில்நுட்ப துறையிலும் அமெரிக்காவுக்கு நிகராக சீனா தன்னை முன்நிறுத்தி வருகிறது. குறிப்பாக விண்வெளி துறையில் ரஷ்யாவை மறைத்துவிட்டு சீனா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு போட்டியாக தன்னை முன்நிறுத்துவதில் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புகளை சைபர் பிரிவு மூலம் முடக்கும் திறமையை கொண்டுள்ளது. இது முக்கிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நலன் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் சீனா தவிர ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நலன் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளன'' என வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications