3ம் உலகப்போரை தடுத்த டிரம்ப்.. நேட்டோவை காலி செய்துவிட்டாரே.. அப்போ உண்மையில் ரஷ்ய உளவாளிதானா?
நியூயார்க்: உலக அரசியலில் பொதுவாக பல controversyக்கள், தியரிக்கள் சுற்றுவது உண்டு. உதாரணமாக மலேசியா விமானம் காணாமல் போகவில்லை கடத்தப்பட்டுவிட்டது, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் காணாமல் போகவில்லை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், பெர்முடா முக்கோணத்திற்குள் போனால் டைம் டிராவல் செய்யலாம் இப்படி நிறைய தியரி உள்ளது. அதில் ஒன்றுதான் அதிபர் டிரம்ப் ஒரு ரஷ்ய கைக்கூலி என்பது.
அதாவது கடந்த 2016 தேர்தலிலேயே டிரம்ப் வெற்றி பெற காரணம் ரஷ்யாதான். ரஷ்யாவின் அரசியல் மூலம்தான் தேர்தல் முறைகேடு செய்து டிரம்ப் வென்றார் என்ற பேச்சு உள்ளது. அதோடு இல்லாமல் டிரம்ப் ஒரு ரஷ்ய உளவாளி.. அவர் டிரம்ப் டவரை உருவாக்கும் முன்பே ரஷ்யாவின் உளவுத்துறையில் பயிற்சி பெற்றவர் என்றெல்லாம் பேச்சு உள்ளது. இப்போதும் கூட அந்த வாதம் தினம் தினம் அமெரிக்க அரசியலில் யாராவது ஒருவரால் வைக்கப்படும்.

அதெல்லாம் நிரூபிக்கப்பட்டது இல்லை. அதோடு அதற்கு ஏற்ற பெரிய ஆதாரங்கள் கூட வைக்கப்பட்டது இல்லை. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இப்போது டிரம்ப் செய்த சில செயல்கள் அவர் உண்மையில் ரஷ்ய உளவாளி தானா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
1. உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட காரணம் உக்ரைன் நேட்டோவில் இணைய முயன்றதே. நேட்டோ என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பு.
2. உக்ரைன் நேட்டோவிற்கு நெருக்கமாக முயன்றதை ரஷ்யா விரும்பாமல்.. அதை தடுக்க போர் தொடுத்தது. போர் நடக்கும் சமயத்தில் உக்ரைன் விதிப்படி நேட்டோவில் இணைய முடியாது.
3. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா இத்தனை நாட்கள் உதவியது. டிரம்ப் வரும் வரை உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது.
4. ஆயுதங்களை, போர் கருவிகளை, நிதி ரீதியாகவும் வழங்கி உதவியது. ஆனால் டிரம்ப் வந்து இதை எல்லாம் நிறுத்திவிட்டார்.
5. நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் பணம் தந்து உள்ளோம். அதை திருப்பி கொடுங்கள்.. அதில் பாதிக்கு மேல் நீங்கள் திருப்பி கொடுங்கள், என்று டிரம்ப் உக்ரைனுக்கு உத்தரவிட்டு உள்ளார். உக்ரைனின் இயற்கை வளங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாம். போர் செலவுகளை சமாளிக்க, ஆயுதங்களை வழங்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.
6. உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை காரணமாக உக்ரைன் மீதான தாக்குதலை விரைவில் ரஷ்யா நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு இல்லாமல்.. அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சந்திப்பு சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
7. இது போக ஐநாவில் உக்ரைனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யா, அமெரிக்கா ஒன்றாக சேர்ந்து இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
8. இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் சண்டையால் உருவாக இருந்த உலகப்போரை டிரம்ப் தடுத்து உள்ளார். ஆனால் நேட்டோவை டிரம்ப் கிட்டத்தட்ட காலி செய்துவிட்டார்.
9. டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.
10. நேட்டோவை பகைத்து ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருக்கமாகி உள்ளது. அதோடு ரஷ்யாவுடன் மினரல் டீலிங் செய்யவும் டிரம்ப் பேசி வருகிறார்.
டிரம்ப்பின் இந்த செயல்களை பார்க்கையில்.. அவர் உண்மையில் ரஷ்யாவின் உளவாளி தானோ என்ற கேள்வி மீண்டும் எழாமல் இல்லை! டிரம்ப் இப்படி திடீரென ரஷ்யாவுடன் நெருக்கமாகி உள்ளதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள்!
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications