என்ன நடந்தாலும் விட மாட்டேன்.. விடாப்பிடியாக நிற்கும் டொனால்ட் டிரம்ப்.. இந்தியாவிற்கு எச்சரிக்கை?
நியூயார்க்: என்ன நடந்தாலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதில் வரி விதிக்காமல் விட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிக்காமல் விட மாட்டேன். கண்டிப்பாக வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிப்பேன்.
அமெரிக்கா மீது கூடுதல் வரி விதிக்கும் நாடுகள் மீது நாங்களும் வரி விதிப்போம். ஏப்ரல் 2 வரைதான் டைம். அதற்குள் வரியை குறைக்காத நாடுகள் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான வரிகளை விதைப்போம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரஸ்பர கட்டணம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கூடுதல் வரி
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு ஏன் சிக்கல் தெரியுமா?
பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா, தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.
டிரம்ப்பின் விதி காரணமாக இந்தியா , தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும் . இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். .












Click it and Unblock the Notifications