அபாயம்.. அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும்.. அமெரிக்கா ஆணையம் பகீர் பரிந்துரை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் எனப்படும் USCIRF கோரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
நியூயார்க்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் எனப்படும் USCIRF கோரிக்கை விடுத்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

அமித் ஷா
இந்த நிலையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் அமித் ஷாவிற்கும் அவரின் பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்க வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் எனப்படும் USCIRF கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசுக்கு இது தொடர்பாக அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

என்ன கோரிக்கை
அமெரிக்க அரசுக்கு அந்த அமைப்பு வைத்த கோரிக்கையில், இந்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது. இது ஒரு மத ரீதியான தாக்குதல். மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையில் இந்த சட்டத்தை கொண்டு வர முயல்கிறார்கள். இந்தியா அபாயமான சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது.

ஏன் தவறு
மத ரீதியாக மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தவறானது. முழுக்க முழுக்க தவறான திசையில் இந்த சட்டம் செல்கிறது. இந்தியாவின் வரலாறு இது கிடையாது. இந்தியா எப்போதும் இப்படி மதத்தை அணுகியது கிடையாது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.

பல மில்லியன் மக்கள்
இதனால் பல மில்லியன் இஸ்லாமிய மக்கள் நாடு இன்றி வெளியேற்றப்படுவார்கள். இதற்கு முன்பு இருந்த அரசு இப்படி இல்லை. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமித் ஷாவிற்கும் அவரின் பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும் உடனே அமெரிக்க அரசு தடை விதிக்க வேண்டும், என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

மத சுதந்திரம்
சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் இந்த கோரிக்கையை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அரசு விரைவில் தனது முடிவை எடுக்கும். ஆனால் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் அமெரிக்க அரசுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications