இப்பதான்யா அமெரிக்கா பிரைட்டா ஆரம்பிக்குது.. இந்தியாவுக்கெதிரான வரி ரத்து! ஹிண்ட் கொடுத்த மெயின் தலை
நியூயார்க்: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விரைவில் நீக்கப்படலாம் என்ற சூசகத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்வது "முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா - ஐரோப்பா இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் இந்த கருத்துகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசெண்ட், வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) அளித்த பேட்டியில் இதுகுறித்து விரிவாக பேசினார். ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை காரணமாகக் கொண்டு, இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த வரிவிதிப்பு நடவடிக்கையின் விளைவாக, ரஷியாவிடமிருந்து இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட எண்ணெய் கொள்முதல் சீர்குலைந்துள்ளதாகவும், இதனை அமெரிக்காவின் வெற்றியாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா அமெரிக்கா
மேலும், இந்த வரிவிதிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில், அதை நீக்குவதற்கான ஒரு வழி இருப்பதாகத் தாம் கருதுவதாகவும் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்தார். ரஷியாவுடனான இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி தற்போது குறைந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலை தொடர்ந்தால், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறினார். இந்த கருத்து, இந்தியா மீது அமெரிக்காவின் நிலைப்பாடு மாறக்கூடும் என்பதற்கான முக்கிய சிக்னலாக பார்க்கப்படுகிறது.
ஸ்காட் பெசெண்ட்
அதே பேட்டியில், ஐரோப்பிய நாடுகள் குறித்தும் ஸ்காட் பெசெண்ட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இந்தியா மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையை, ஐரோப்பிய கூட்டாளிகள் நிராகரித்துவிட்டதாக அவர் கூறினார். அதற்குக் காரணமாக, இந்தியாவுடன் பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ள விரும்புவதாகவும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷிய எண்ணெய்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா ரஷியாவிடமிருந்து வெறும் 2 அல்லது 3 சதவீதம் அளவிலான எண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ததாகவும், மேற்கத்திய நாடுகள் விதித்த எண்ணெய் தடைகளுக்குப் பிறகு, அந்த அளவு 19 சதவீதமாக உயர்ந்ததாகவும் அவர் நினைவூட்டினார். இதன் மூலம் ரஷியாவுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐரோப்பா எண்ணெய் வர்த்தகம்
ஆனால், இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் அந்த எண்ணெயை யார் வாங்குகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிய ஸ்காட் பெசெண்ட், அதற்கு பதிலாக ஐரோப்பியர்களே அதை வாங்குகிறார்கள் என்று கூறினார். இதன் மூலம், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தும் ரஷியாவுக்கே, ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக நிதியளிப்பதாகவும், இது "முட்டாள்தனத்தின் உச்சம்" என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
25 சதவீத கூடுதல் வரி
இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரி ஒருபுறம், ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு மறுபுறம் என, அமெரிக்காவின் இந்த கருத்துகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் எந்த திசையில் நகரும், கூடுதல் வரி உண்மையிலேயே நீக்கப்படுமா என்ற கேள்விகள், வரும் நாட்களில் மேலும் முக்கியத்துவம் பெறும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications