ரூ.47 கோடி கொடுங்க.. பலாத்கார வழக்கில் ட்ரம்பிற்கு பெரிய தோல்வி.. இடியை இறக்கிய உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பலாத்கார வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு சட்டரீதியாக மீண்டும் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரபல பெண் எழுத்தாளர் இ. ஜீன் கரோல் தொடர்ந்த பாலியல் பலாத்காரம் ற்றும் அவதூறு வழக்கில், தனக்கு எதிராக வந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.

Donald Trump

வழக்கின் பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த 82 வயதான பிரபல பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் இ. ஜீன் கரோல். இவர் 1996-ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையின் ஆடை மாற்றும் அறையில் வைத்து டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை 2019-ஆம் ஆண்டு தான் எழுதிய புத்தகம் மூலம் ஜீன் கரோல் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த டொனால்ட் ட்ரம்ப், ஜீன் கரோல் ஒரு பொய்யான நபர் என்றும், தன் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவே அவர் திட்டமிட்டு பொய் சொல்கிறார் என்றும் பகிரங்கமாக விமர்சித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இழப்பீடு

டொனால்ட் ட்ரம்பின் அவதூறு பேச்சுகளுக்கு எதிராக ஜீன் கரோல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நடுவர் மன்றம், ட்ரம்ப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும், ஜீன் கரோலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதும் உண்மை எனத் தீர்ப்பளித்தது. அத்துடன் பாதிக்கப்பட்ட ஜீன் கரோலுக்கு ட்ரம்ப் சுமார் 5 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, வட்டியுடன் சேர்த்து சுமார் 5.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடிக்கும் மேல்) தொகையை ஜீன் கரோலுக்கு ட்ரம்ப் தரப்பு செலுத்தியது.

உச்ச நீதிமன்றத்தில் ட்ரம்ப் வைத்த கோரிக்கை

கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை டொனால்ட் ட்ரம்ப் அணுகினார். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கடந்த ஜூன் மாதமே உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இருப்பினும், அந்த முடிவை நீதிமன்றம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி ட்ரம்ப் தரப்பில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்டனர். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள் எதையும் உச்ச நீதிமன்றம் விரிவாகத் தெரிவிக்கவில்லை.

இதன்மூலம், 2023-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு வழக்கின் தீர்ப்பு இறுதியானது என்பதும், அதை இனி எந்த நீதிமன்றத்திலும் ட்ரம்ப் எதிர்க்க முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது.

மற்றொரு அவதூறு வழக்கு நிலுவை

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான மற்றொரு அவதூறு வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு அதிபராக இருந்த காலகட்டத்தில் ஜீன் கரோல் குறித்து பேசிய அவதூறு கருத்துக்களுக்காக, மற்றொரு வழக்கில் ட்ரம்ப் சுமார் 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தச் சமயத்தில் தான் அதிபராக இருந்ததால் தனக்குச் சட்டப் பாதுகாப்பு (Presidential Immunity) உண்டு எனக் கூறி அதற்கும் ட்ரம்ப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவை விசாரிப்பதா வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

இந்தச் சூழலில், ஜீன் கரோலின் பாலியல் வன்கொடுமை வழக்கில் ட்ரம்பின் மனு அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சட்டப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+