நோ ரீல்ஸ்...நோ போஸ்ட்...நள்ளிரவில் ஏரோப்ளேன் மோடுக்கு போன இன்ஸ்டாகிராம் பயனாளிகள்! காரணம் இதுதான்
நியூயார்க்: பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் நேற்றிரவு திடீரென முடங்கியதால் டிவிட்டரில் InstagramDown எனும் ஹாஷ் டேக் டிரென்டானது.
இதற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியாத நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பாதிப்பை பயனாளர்கள் உணர்ந்துள்ளனர்.
அதேபோல iOS மற்றும் Android என இரண்டு பயனாளர்களையும் இது பாதித்ததன் காரணமாக பலர் இன்ஸ்டாகிராம்-க்கு பதிலாக டிவிட்டரை பரிந்துரைப்பதை போன்று மீம்ஸ்களை பகிர்ந்தனர்.

மீம்ஸ்கள்
அமெரிக்காவின் நேரப்படி காலை 9.30 மணி முதல் இன்ஸ்டாகிராம் சரியாக செயல்படவில்லை என சொல்லப்படுகிறது. இதை உணராத மக்கள் தங்கள் நெட் இணைப்புகளை ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்தும், வைஃபை நெட்வெர்க்கில் பிரச்னை என்றும் முதலில் கருதியுள்ளனர். ஆனால், பின்னர்தான் உலகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இன்ஸ்டாகிராம் சரியாக செயல்படவில்லை என்று உணர்ந்துள்ளனர். இது குறித்து டிவிட்டரில் மீம்ஸ்கள் டிரென்டாகியுள்ளன.

ஹேஷ்டேக்
பலர் இன்ஸ்டாகிராமுக்கு பதில் டிவிட்டரை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகளை படிக்கவும், அதை பகிரவும் முடியாமல் பயனர்கள் தவித்துள்ளனர். மேலும் தனிப்பட்ட மெசேஜ்களை அனுப்ப முடியாமலும், வீடியோக்களை பார்க்க முடியாமலும் தவிர்த்துள்ளனர். இதனையடுத்து கடுப்பான பயனர்கள் டிவிட்டரில் #InstagramDown எனும் ஹேஷ்டேகை டிரென்ட் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறி டிவிட்டரில் சென்று குடியேறுவது போன்றும் பல மீம்ஸ்கள் நேற்றிரவு இரவு முழுவதும் தெறிக்கவிடப்பட்டுள்ளன.

இயல்புதான்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இன்ஸ்டாகிராம் அவ்வப்போது முடங்கி வருவது இயல்புதான். அதேபோல மெட்டா பேஸ்புக், வாஸ்ட்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தையும் நடத்தி வருகிறது. இதிலும் அவ்வப்போது சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு முடங்கிவிடுவது இயல்புதான். தற்போது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை பெரியதாக பாதித்திருக்கிறது.

இந்தியா
இதற்காக முழுமையான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக மெட்டா தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியாயினும் சுமார் 230.25 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் இந்த பாதிப்பு பல பயனாளர்களை தூங்கவிடாமல் ஆக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications