எங்களால் எதுவும் செய்ய முடியாது.. கைவிரித்த யு.எஸ்! முக்கியமான கட்டத்தை எட்டிய இஸ்ரேல் - ஈரான் போர்
நியூயார்க்: ஈரான் இஸ்ரேலை தாக்கினால்.. அதன்பின் நடக்க போகும் விஷயங்களை நாங்கள் தடுக்க முடியாது. முக்கியமாக இஸ்ரேல் பதிலடி கொடுக்க விரும்பினால் இஸ்ரேலை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இஸ்ரேலை எங்களால் "கட்டுப்படுத்த முடியாது" என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை அமெரிக்கா சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1 அன்று நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலிய படைகள் ஈரானில் தாக்குதல் நடத்தின. ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
தாக்குதல்: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் இஸ்ரேலை தாக்கினால்.. அதன்பின் நடக்க போகும் விஷயங்களை நாங்கள் தடுக்க முடியாது. முக்கியமாக இஸ்ரேல் பதிலடி கொடுக்க விரும்பினால் இஸ்ரேலை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. அதோடு இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தர ஈரான் நினைக்க கூடாது. இரண்டு தரப்பும் மாறி மாறி தாக்கிவிட்டன. இந்த மோதல் முடிந்துவிட்டது. இனி ஈரான் தவறு செய்யக்கூடாது. இனி ஈரான் தாக்குதல் நடத்தினால் அது நிலைமையை மோசமாக்கும்.
அமெரிக்கப் படைகள் இஸ்ரேலை பாதுகாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிடம் பேசிய பிறகு கூறினார். இஸ்ரேலுக்காக பாதுகாப்பாக உறுதுணையாக இருப்போம்.
ஈரான் இதில் இனி எந்த விதமான தாக்குதலையும் நடத்த கூடாது. இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications