இனி யாரும் உங்கள் பூட்டை ஆட்ட முடியாது.. கூகுள் செய்த சூப்பர் சம்பவம்.. பாஸ்கீஸ் என்றால் என்ன?
நியூயார்க்: இன்றை உலகம் நவீன டிஜிட்டல் உலகம் ஆகிவிட்டது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு என்பது மெயில்கள் இருக்கிறது, அதற்கு பூட்டு தான் பாஸ்வேர்டு. இந்த உலகத்திலும் திருடர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஹேக்கர்கள் என்று பெயர். நம்ம ஊரில் பணம் அதிகமாக உள்ள வீட்டின் பூட்டை எப்படி ஆட்டுவார்களோ, அதுபோல் இங்கும் பூட்டை ஆட்டத்தான் செய்வார்கள்.
இந்த பூட்டு கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருந்தால் தப்பிப்பார். இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் அத்தனை ரகசியங்களும் அம்பலத்துக்கு வந்துவிடும். பணமும் போய், விதியை நொந்து கொள்ளும் நிலை வரும். எனவே மற்றவர்கள் உங்கள் பூட்டை ஆட்டாமல் இருக்க பாஸ்வேர்டு (உங்கள் பூட்டு) ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.

இன்றைக்கு எல்லாருமே ஒரே பிராண்ட் வீடுகளில் தான் (ஜிமெயிலில்) குடியிருக்கிறோம். இதற்கான பூட்டை... சரிங்க விஷயத்துக்கு வந்திடலாம். உங்கள் பாஸ்வேர்டை கடினமாக வையுங்கள். மிகவும் எளிதான பாஸ்வேர்டு வைத்திருந்தால் மொத்தமாக புகுந்து துவம்சம் செய்துவிடுவார்கள். சிலர் கடினமான பாஸ்வேர்டு கொடுத்துவிட்டு என்ன பாஸ்வேர்டு கொடுத்தோம் என்று தெரியாமல் தவிப்பார்கள். இன்னும் சிலர் எளிதான பாஸ்வேர்டுகளை வைக்கிறார்கள். அதாவது
உதாரணமாக 'pass@123, abcd1234' என இருக்கும். இப்படி பாஸ்வேர்டு வைத்திருந்தால் உங்கள் மெயில் செக்யூரிட்டி கேள்விக்குறியகிவிடும். சைபர் குற்ற ஆசாமிகள் ரேண்டமாக இந்த எளிய பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்-இன் செய்து தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். இந்த பிரச்சனை தீர்க்க நீண்ட காலமாக ஆராயந்து வந்த கூகுள், பாஸ்வேர்டு மறப்பது, எளிய பாஸ்வேர்டு வைப்பது ஆகிய இரண்டு பிரச்சனைக்கும் தீர்வு கொண்டு வந்துள்ளது. அதாவது கூகுளின் Passkeys (பாஸ்கீஸ்) உங்களது பாஸ்வேர்டு பிரச்சனைக்கு பெரிய தீர்வாக இருக்கும்.
அது எப்படி தீர்வாக இருக்கும்.. எளிமையாக சொல்கிறேன் பாருங்கள். நீங்கள் கூகுள் பே பயன்படுத்தினால் உங்களது பயோமெட்ரிக் கண்டிப்பாக தேவை அதுபோல இதிலும் கைரேகை, முக அங்கீகாரம் அல்லது ஸ்க்ரீன் லாக் போன்ற வழியில் உதவுகிறது. கொஞ்சம் விவரமாக பார்ப்போம் வாங்க..
பாஸ்கீஸ் என்றால் என்ன? வழக்கமான பாஸ்வேர்ட் பயன்பாட்டு முறைக்கு மாற்றுதான் பாஸ்கீஸ்.. நீங்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கில் இதை அறிமுகம் செய்திருக்கிறது கூகுள். பாஸ்கீஸ் பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது என்று கூறும் கூகுள், இனி வரும் நாட்களில் பயனர்கள் தங்களது செல்லப்பிராணிகளின் பெயர், பிறந்தநாள் அல்லது password123 போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கிறது.
இப்போதைக்கு இது கூகுள் கணக்குகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் பாஸ்கீஸ் உள்ளது. மேலும், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் பாஸ்கீஸ் தொடர்பாக கூகுள் வேலை செய்து வருகிறதாம். பாஸ்கீஸை பயன்படுத்த பயனர்கள் மேனுவலாக அனுமதி கொடுக்க வேண்டும்.

இது வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் கூகுள் கணக்கில் ப்ரொபைல் படத்தை முதலில் க்ளிக் செய்ய வேண்டும். அதில் 'மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் > செக்யூரிட்டி > பாஸ்கீஸ்' தேர்வு செய்து இதனை பயன்படுத்தலாம். அதை செய்தால் பயனர்களின் பாஸ்வேர்டை உள்ளிட சொல்கிறது கூகுள். அதன் மூலம் பாஸ்கீஸ் அம்சத்தை பயனர்கள் ஆக்டிவேட் செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களில் இந்த சேவையை நீங்கள் பெற முடியும். ஆல்பபெட் சிஇஒ சுந்தர் பிச்சை இது தொடர்பாக கட்டுரை ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications