ஏலியன் வருகையா? அமெரிக்கா, கனடாவில் திடீரென பறந்த "யுஎப்ஓ".. சுட்டு வீழ்த்தப்பட்ட பாகங்கள் எங்கே?
யுஎப்ஓ பார்க்க அப்படியே கார் அளவில் இருந்துள்ளது. ஆனால் டிக் டாக் சாக்லேட் வடிவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூயார்க்: கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 2 முறை யுஎப்ஓ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. நேற்று அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.
Recommended Video
அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த நிலையில் கனடா வானில் பறந்த மர்ம பொருள் இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 2 முறை மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தோற்றம் எப்படி?
இந்த யுஎப்ஓவின் தோற்றம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த யுஎப்ஓ பார்க்க அப்படியே கார் அளவில் இருந்துள்ளது. ஆனால் டிக் டாக் சாக்லேட் வடிவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கார் அளவில் காணப்பட்டு இருக்கிறது. அதே சமயம் சிலிண்டர் உருவில் சென்றுள்ளது. வானத்தில் கார் சைசில் ஒரு டிக் டாக் சாக்லேட் பறந்து சென்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்த பொருள் பறந்து சென்றுள்ளது. இதன் வண்ணம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. அதோடு இதில் குறியீடுகள் ஏதாவது இருந்ததா? ஏதாவது அடையாளங்கள் இருந்ததா என்பது குறித்த விவரங்கள் எல்லாம் வெளியாகவில்லை.

நிலவும் கேள்வி
இந்த யுஎப்ஓ தொடர்பாக பல்வேறு கேள்விகள் நிலவி வருகின்றன.
இதில் எஞ்சின் எதுவும் இல்லை. அப்படி இருக்க இந்த யுஎப்ஓ எப்படி பறக்கிறது?
யுஎப்ஓவில் பைலட் இல்லை. அப்படி என்றால் இதை யார் இயக்குவது?
எந்த தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது?
எந்த நாட்டிற்கு சொந்தமானது இது?
ஏலியன்களின் யுஎப்ஓ ஆ இது?
யுஎப்ஓ வேறு நாட்டிற்கு சொந்தமானது என்றால் எதற்காக இது பறக்க வைக்கப்படுகிறது?

ஏலியன் பதற்றம்
தற்போது இந்த சம்பவங்கள் காரணமாக ஏலியன் குறித்த அச்சம் எழுந்துள்ளது. கடந்த 2020ல்தான் பூமியில் அடையாளம் காண முடியாத யுஎப்ஓக்கள் பறந்ததாக முதல் முதலில் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. பறக்கும் தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் யுஎப்ஓ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மீட்பு பணியில் சிக்கல்
நேற்று அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட யுஎப்ஓவில் திசை மாற்றுவதற்கான பொருட்கள் எதுவும் அதில் இல்லை. அது வெறுமனே வானில் பறந்து இருக்கிறது. பயணிகள் விமானம் பறக்கும் 30 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேலாக 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து உள்ளது. இடை இடையே கொஞ்சம் உயரம் குறைவாகவும் பறந்து உள்ளது. இதனால் பயணிகள் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதன் பொருட்கள் அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்துள்ளது. இதன் பொருட்களை மீட்க அமெரிக்க ராணுவம் விரைந்துள்ளது. அங்கே பனி மோசமாக நிலவுவதால் இதை மீட்பதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட பொருட்களை மீட்ட பின் இது தொடர்பாக கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications