தோஸ்து படா தோஸ்து.. ஐரோப்பா கண்டத்தையே அதிர வைத்த டிரம்ப் - புடின்.. கரம் கோர்த்த பரம எதிரிகள்!
நியூயார்க்: ஐநாவில் உக்ரைனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. இது பலரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் இதில் எதிர்பார்க்காத விஷயம்.. உக்ரைனுக்கு எதிராக அமெரிக்காவும் வாக்களித்துள்ளது. நேட்டோ தொடர்பான ஒரு விவகாரத்தில்.. அல்லது ரஷ்யா தொடர்பான ஒரு விவகாரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ஐநாவில் அமெரிக்கா வாக்களிப்பது இதுவே முதல்முறை.
மொத்த ஐரோப்பா கண்டத்தையும் இந்த விவகாரம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்கு உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க - ரஷ்யா கரம் கோர்த்ததை பார்த்து கடுப்பாகி உள்ளன.

என்ன தீர்மானம்:
உக்ரைனும், ஐரோப்பிய நட்பு நாடுகளும் இணைந்து ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் வென்றுள்ளது. 'உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் ஐநா பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
இந்த தீர்மானம்.. உக்ரைனின் எல்லையை பாதுகாப்பது, உக்ரைனின் இறையாண்மையை பாதுகாப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியது. முக்கியமாக உக்ரைன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் உக்ரைனை ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றது. உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வரைவு செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவானது, 65 வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.
அமெரிக்கா ரஷ்யாவுடன் கரம் கோர்க்க என்ன காரணம்?
உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை காரணமாக உக்ரைன் மீதான தாக்குதலை விரைவில் ரஷ்யா நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு இல்லாமல்.. அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.
விரும்பாத ஐரோப்பா
டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.
சமாதானப் பேச்சுவார்த்தையில் தங்களை சேர்த்துக்கொள்ளாததை அடுத்த ஐரோப்பிய தலைவர்கள் பாரிஸில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் டிரம்பின் செயல்பாடு பற்றி அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றால் பேச்சுவார்த்தையில் டிரம்ப் கை ஓங்கி இருக்கும்.. புடின் கையும் ஓங்கி இருக்கும்.
டிரம்பிற்கும் உக்ரைனை பெரிதாக பிடிக்காத காரணத்தால்.. உக்ரைனை அழுத்தி.. அந்த நாட்டிற்கு எதிரான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. உக்ரைனுக்கு எதிரான கடுமையான முடிவுகளை இதில் எடுக்கலாம்.. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீர்மானம்
இதையடுத்தே ஐநாவில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனும், ஐரோப்பிய நட்பு நாடுகளும் இணைந்து ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் வென்றுள்ளது. 'உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் ஐநா பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா - ரஷ்யா ஒன்றாக கரம் கோர்த்து உள்ளது கடுமையான விவாதங்களையும், பதட்டங்களையும் உலகம் முழுக்க ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications