உடம்பை வில் போல் வளைத்து வித்தை.. அமெரிக்காவில் வாழும் 100 வயது இந்திய யோகா பாட்டி!
இந்தியாவைச் சேர்ந்த 100 வயது பாட்டி ஒருவர் அமெரிக்காவில் யோகா மாஸ்டராக உள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல பெண் யோகா மாஸ்டர் போர்சான் லிஞ்ச், தனது 100வது வயதிலும் தளராமல் யோகா செய்து வருகிறார்.
இந்திய - பிரெஞ்ச் வம்சாவழியைச் சேர்ந்வர் யோகா மாஸ்டர் போர்சான் லிஞ்ச். இவர் தனது ஏழாவது வயதில் இருந்து யோகா செய்து வருகிறார்.
இந்தியாவில் வசித்த போது தனது அத்தையுடன் ஒரு கடற்கரையில் நடந்து சென்ற போது தான், முதன்முதலில் யோகா கலையை கண்டுள்ளார் லிஞ்ச்.

ஆசை:
அந்த கடற்கரையில், சில இளைஞர்கள் யோகா செய்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்த லிஞ்ச், தானும் யோக கற்க வேண்டும் என்ற ஆசையை அத்தையிடம் கூறினார். ஆனால் இது பெண்களுக்கு ஒத்துவருமா என அத்தை தயங்கியுள்ளார்.

யோகா மாஸ்டர்:
'ஆண்களால் செய்ய முடியும் என்றால், என்னாலும் செய்ய முடியும்' என வீராவேசமாகக் கூறி, அன்று முதல் யோகா செய்ய ஆரம்பித்திருக்கிறார். யோகா கலை மீது போர்சான் லிஞ்சிக்கு இருந்த ஆர்வம், சிறு வயதிலேயே அவரை யோகா மாஸ்டராக உயர்த்தியது.

பத்மஸ்ரீ விருது;
85 ஆண்டுகளாக யோகா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இதற்காக இந்திய அரசிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருதையும் லிஞ்ச் பெற்றிருக்கிறார். "யோகா என்பது வாழ்வின் சந்தோஷம். நமது உடம்பை அஷ்டக்கோணலான வளைப்பது மட்டும் யோகா அல்ல. நமது மனதில் இருப்பதை முகத்தில் பிரதிபலிக்கச் செய்து, மற்றவர்களிடம் நாம் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்லவும் யோகா உதவும்", என்கிறார் போர்சான் லிஞ்ச்.

வயது தடையில்லை:
லிஞ்சின் யோகா பயிற்சிக்கு அவரது வயது ஒரு தடையாகவே இல்லை. அவருக்கு வயது 100 என்பதை சொன்னால் மட்டுமே தெரியும். "என்னுடைய 100வது வயதில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. எனக்கு பயம் இல்லை. எனவே நான் யோகா செய்வதை நிறுத்தவே மாட்டேன்", என்கிறார் இந்த 100 வயது யோகா மாஸ்டர்.

4 அறுவைச் சிகிச்சை:
இடுப்பில் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்தும் கூட போர்சான் லிஞ்ச் யோகா செய்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. யோகா மட்டுமல்லாமல், பால்ரூம் டான்ஸ் எனப்படும் ஒருவகை நடனத்தை பயிற்சி செய்து வருகிறார் லிஞ்ச். இந்த 100 வயது யோகா பாட்டி, நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார் என்றால், அது மிகையில்லை.












Click it and Unblock the Notifications