கோடநாடு எஸ்டேட்டில் 'அன்று' கரண்ட் கட்டானது எப்படி? பின்னணியில் யார்? மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு
ஊட்டி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று மேலும் புதிதாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 4 தனிப்படைகள் உடன் சேர்த்து மொத்தம் 5 தனிப்படைகள் இந்த வழக்கில் தனித்தனி கோணங்களில் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக சம்பவம் நடைபெற்ற கோடநாடு எஸ்டேட் பகுதியில் மின்சாரம் துண்டிப்பு நடந்தது எப்படி என்ற கோணத்தில் தீவிர விசாரணை துவங்கப்பட்டு இருக்கிறது.
கோடநாடு கொலை வழக்கு தற்போது மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

5 தனிப்படைகள் தீவிரம்
இன்று மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. விசாரணை பல்வேறு கோணங்களில் நடத்தப்பட வேண்டியிருப்பதால் தனிப்படைகள் எண்ணிக்கை அதிகரித்து 5 ஆக உயர்ந்துள்ளது. தனிப்படைகள் ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்த உள்ளன.

பல கோணங்கள்
ஏனென்றால், கொலை கொள்ளை மட்டுமன்றி இந்த வழக்கு தொடர்புடைய சம்பவங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு காரணம் பற்றியும் ஒவ்வொரு தனிப்படை விசாரணை செய்தால் இந்த விசாரணை விரைவில் முடிவடைந்து குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று அரசு நினைத்து அதிவேகமாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

மின்சார இணைப்பு துண்டிப்பு
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி. அன்றைய தினம் எஸ்டேட் பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது. இதுவரை சாட்சியங்கள் இதனை உறுதி செய்துள்ளன. ஆனால் கொடநாடு எஸ்டேட் பகுதியில் மின் இணைப்பு அவ்வளவு எளிதாக துண்டிக்கப்பட முடியாது.

பாதுகாப்பு வளையம்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், அவர் சென்று தங்குவார் என்பதால் அதிநவீன பாதுகாப்பு வளையம் மற்றும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நேரடியாக மின்சார இணைப்பு துணை மின் நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் உண்டு. அப்படியிருக்கும்போது எப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. மின்சார வாரியத்தில் யாரேனும் இதற்கு துணையாக இருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

உத்தரவிட்டது யார்
அன்றைய தினம் யார் யார் மின் வினியோக பணியில் இருந்தார்களோ அவர்கள் ஒவ்வொருவரிடமும் காவல்துறையினர் விசாரணையை நடத்த ஆரம்பித்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அது தொடர்பாக, புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அந்த புத்தகம் தற்போது காவல்துறையினரால், எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மின்சாரம் அதிகாரிகள் துணையோடு துண்டிக்கப்பட்டிருந்தால், அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார் என்ற கேள்வி எழும். எனவே, இது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் கோடநாடு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications