குன்னூர் அருகே கோயிலுக்கு வர கதவை உடைத்த கரடி.. மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் லூர்து புரம் கிராமத்தில் இரவு கோயில் கதவை உடைத்து உணவு தேடிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்,காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

Bear breaks down door

இந்நிலையில் சமீபகாலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் கரடிகள் உலா வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் குன்னூர் லூர்து புரம் கிராமத்தில் இரவு கரடி ஒன்று உணவு தேடி உலா வந்தது. இந்த சிசிடிவி வீடியோ காட்சி மற்றும் குரைக்கும் நாயின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+