நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மசூதியில் ஒலித்த பாங்கு.. 2.45 நிமிடம் பேச்சை நிறுத்தி காத்திருந்த ராகுல்.. வெளியான வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் பேசினார். அப்போது மசூதியில் தொழுகைக்கான அழைப்பான பாங்கு ஒலிக்கப்பட்டது. இதை கேட்ட ராகுல் காந்தி தனது பேச்சை 2.45 நிமிடங்கள் வரை நிறுத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் ராகுல் காந்தியின் செயலுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பாதயாத்திரை கடந்த 7ந் தேதி தொடங்கினார்.

இந்திய ஒற்றுமைக்கான பேரணி என்ற பெயரில் இந்த யாத்திரை கேரளாவில் முடிவடைந்துள்ளது. இன்று முதல் கர்நாடகத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ரேஸ்.. சோனியா ஆதரவு யாருக்கு? 'குறுக்கே புகுந்த 2 தலைகள்’.. இன்று முடிவு தெரியும்!காங்கிரஸ் தலைவர் ரேஸ்.. சோனியா ஆதரவு யாருக்கு? 'குறுக்கே புகுந்த 2 தலைகள்’.. இன்று முடிவு தெரியும்!

நீலகிரி மாவட்டத்தில் ராகுல்

நீலகிரி மாவட்டத்தில் ராகுல்

இந்நிலையில் தான் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை நேற்று ராகுல் காந்தி அடைந்தார். காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சியின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. தேயிலை தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகள், விவசாயிகளின் குறைகளை கேட்டார். அதன்பிறகு ஊர்வலம் சென்றனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஜங்ஷனில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல்காந்தி பேசினார்.

ஒற்றுமைக்கான இடம் என புகழாரம்

ஒற்றுமைக்கான இடம் என புகழாரம்

அப்போது ‛‛கூடலூர் 3 மொழி, 3 கலாச்சாரம், 3 மொழிகளை இணைக்கும் இடமாக உள்ளது. இங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என 3 மொழிகளும் ஒன்றாக இணைந்து இருக்கிறது. வெவ்வேறு மதங்களின் அடிப்படை தன்மையையும், அதன் முறையையும் பிற மதங்கள் வரவேற்கும் வகையில் இந்த இடம் உள்ளது. இந்த யாத்திரையின் கொள்கையை நிரூபிக்கும் வகையில் இந்த இடம் அமைந்துள்ளது. எந்த கொள்கைக்காக நடத்தப்படுகிறதோ அந்த கொள்கை அனைத்தும் இந்த இடத்தில் இருக்கிறது. கவர்னர்களின் தலையீடு நாங்கள் இங்கே ஒற்றுமை பற்றியும், ஒன்றாக சேர்ந்து வாழ்வதை இங்கு கொண்டு வரவில்லை. அதற்கு மாறாக எப்படி ஒன்றாக இருக்க வேண்டும். எப்படி இணைந்து வாழ வேண்டும் என்பதை உங்களிடத்தில் இருந்து பிற மக்களுக்கு எடுத்துச்செல்கின்றோம்'' என்பன உள்பட பல்வேற அம்சங்கள் குறித்து ராகுல் காந்தி பேசினார்.

பேச்சை நிறுத்திய ராகுல் காந்தி

பேச்சை நிறுத்திய ராகுல் காந்தி

இவ்வாறு ராகுல் காந்தி பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் மேடையின் அருகே இருந்த மசூதியில் இருந்து இஸ்லாமியர்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலிக்கப்பட்டது. இதை கேட்ட ராகுல் காந்தி தனது பேச்சை நிறுத்தினார். 2 நிமிடம் 45 வினாடிகள் வரை உரையை நிறுத்தியபடியே ராகுல் காந்தி காந்தி காத்திருந்தார். பாங்கு முழுமையாக ஒலித்த பிறகு ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார்.

பாராட்டு

பாராட்டு

இந்நிலையில் ராகுல்காந்தி தனது பேச்சை நிறுத்தும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வுக்கு தற்போது பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். நாட்டில் மதம்சார்ந்த விஷயங்கள் தொடர்பாக சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
Former Congress president and MP Rahul Gandhi spoke in Nilgiri district's Gudalur yesterday. Then Rahul Gandhi stopped his speech till 2.45 minutes while the mosque prayer song was playing. After the release of the related video, Rahul Gandhi is being praised.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X