நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஸி ஷாப்பிங்.. ஜிலுஜிலு ஹேப்பி ரோடு.. சில்லு விளையாட்டு ஆடும் கலெக்டர்.. கலகலக்கும் ஊட்டி!

ஊட்டியில் ஹேப்பி ரோடு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சில்லு விளையாட்டு ஆடும் கலெக்டர், கலகலக்கும் ஊட்டி!- வீடியோ

    ஊட்டி: ஒரு பக்கம் ஷாப்பிங்... மறு பக்கம் டான்ஸ் என ஊட்டியில் "ஹாப்பி ரோடு" களை கட்டி காணப்படுகிறது. அது என்ன ஹேப்பி ரோடு? அதன் நோக்கம் என்ன? என்பதை பார்ப்போம்!!

    பொதுவாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து போவார்கள். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவார்கள்.

    இது போக சீசனுக்கு உள்நாடு, வெளிநாட்டை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் எல்லோருமே திரண்டு வருவார்கள்.

    உள்ளூர் மக்கள்

    உள்ளூர் மக்கள்

    இது போன்ற நேரங்களில் ஊருக்குள் எல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும். இந்த நெரிசலில் உள்ளூர் மக்களும் சேர்ந்து இன்னலை அனுபவிப்பர். இந்த கூட்டத்திற்காகவே நிறைய சுற்றுலா பயணிகள் விரும்பும் பொருட்களை வாங்க முடியாமல், ஷாப்பிங் செல்வதையே தவிர்த்து விட்டு ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.

    ஜாலி ஷாப்பிங்

    ஜாலி ஷாப்பிங்

    இந்த பிரச்சனையை போக்கவும், உள்ளூர் நடைபாதை வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும் வகையிலும் ஹேப்பி சாலை என்ற திட்டத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தினார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட முக்கிய சாலையில், சில அடி தூரத்திற்கு நடைபாதை வியாபாரிகள் விரும்பும் பொருட்களை போட்டு கடை வைத்து கொள்ளலாம்.

    ஆடல், பாடல்

    ஆடல், பாடல்

    சீசன் முடிந்தபிறகு சனிக்கிழமைகளில் மட்டும்தான் இந்த கடையை வைக்க வேண்டும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பும் பொருட்களை இந்த இடத்தில் கூட வாங்கி செல்லலாம். இதற்காக வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக அதே இடத்தில் மேடை ஒன்று அமைக்கப்பட்டு ஆடல், பாடல் என கலைநிகழ்ச்சிகளும் நடக்கும்.

    மீண்டும் அறிமுகம்

    மீண்டும் அறிமுகம்

    ஆனால் பெரிய கடை வியாபாரிகள் தங்களுக்கு தொழில் நஷ்டம் ஆகிவிடும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று மீண்டும் இதேதிட்டத்தினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட எஸ்.பி., சண்முகபிரியாவுடன் இணைந்து அறிமுகப்படுத்தினார்.

    பெரும் வரவேற்பு

    பெரும் வரவேற்பு

    ஊட்டி சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை இந்த ஹேப்பி ரோடு செயல்படும். இனி சனிக்கிழமைகளில் இந்த ஹேப்பி ரோடு களை கட்ட போகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் இதற்கு உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு தந்துள்ளனர்.

    களை கட்டுகிறது

    களை கட்டுகிறது

    சுற்றுலா பயணிகள் இந்த ஹேப்பி ரோடு பகுதியில் சுதந்திரமாக நடமாடலாம் என்பதால் இன்னும் குஷியாகி விட்டனர். ஒரு புறம் ஷாப்பிங்... ஒரு புறம் டான்ஸ்... என களை கட்டி காணப்படுகிறது ஹேப்பி ரோடு!!

    English summary
    Happy Road Celebration in Ooty today. District Collector Innocent Divya initiated this ceremony. A large number of tourists took part.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X