Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்னூர் விபத்து எதிரொலி! ஊட்டிக்கு போறீங்களா? மலைப்பாதையில் "இந்த" 4 பாயிண்ட்டுகள் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: உதகை போன்ற மலைப்பாதைகளில் 35 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கக் கூடாது என சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து 54 பேர் உதகைக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர். அங்கு சில இடங்களை சுற்றி பார்த்துவிட்டு குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று வீடு திரும்பினர். அப்போது பேருந்து மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது.

How to drive in ooty like hill stations , Nilgiri police advice

இது மோதிய வேகத்தில் அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் இருள் சூழ்ந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.

இந்த மீட்பு பணிகளால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து நேரில் பார்த்தவர் கூறுகையில், நேற்று முன் தினம் மாலை 5.15 மணி இருக்கும். அப்போது நாங்கள் அந்த பேருந்துக்கு பின்னாடிதான் வந்து கொண்டிருந்தோம். தென்காசியிலிருந்து சுற்றுலா வந்தவர்களின் பேருந்து கீழே இறங்கி வந்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

அந்த பேருந்தில் இரு டிரைவர்கள் இருந்தனர். ஒரு டிரைவர் வெளியே குதித்துவிட்டார். இன்னொருவர் இறங்கி வருகிறார். மேலே இருந்து வரும் போதே பிரேக் பிரச்சினை ஏற்பட்டது என்று சொன்னார்கள். கீழே இறங்கும் போது வளைவில் கன்ட்ரோல் செய்ய முடியாமல் அப்படியே வாகனத்தை விட்டுவிட்டார். இந்த மாற்று டிரைவரால்தான் விபத்து நடந்தது.

மேலே பிரேக் பிரச்சினை ஆன போதே இன்னொருவர் டிரைவர் தான் ஓட்டுவதாக கேட்டாராம். ஆனால் ஓட்டி வந்த டிரைவர்தான் வேண்டாம், நான் மேட்டுப்பாளையத்தில் தருகிறேன் என கூறிவிட்டாராம். இவ்வாறு விபத்தை நேரில் பார்த்தவர் கூறினார். இந்த நிலையில் மலைப்பாதைகளில் வாகனங்களை எப்படியெல்லாம் இயக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர். ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் 35 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கக் கூடாது. மலை பிரதேசங்களில் வாகனம் இயக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். மலைப்பாதையில் கீழ் நோக்கி இறங்கும் போது அடிக்கடி பிரேக் அழுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நாட்களுக்கு சுற்றுலா வருவோர் கண்டிப்பாக தேவைக்கேற்ப ஓட்டுநர்களை அழைத்து வர வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+