ஊட்டி- கோத்தகிரி சாலையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! அப்பளம் போல் நொறுங்கியதால் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையில் உள்ள கட்டப்பெட்டு பகுதியில் சாலை ஓரத்தில் மரம் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று பாரம் தாங்காமல் சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக அந்த லாரியில் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

lorry

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. இந்நிலையில் உதகை- கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரவு பெய்த மழையில் சாலையோரம் மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மண் ஈரப்பதம் அடைந்ததால் பாரம் தாங்காமல் சுமார் 100 அடி தேயிலை தோட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஓட்டுநர் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து உருண்டு விழுந்ததில் அப்பளம் போல் நொறுங்கியதை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போல் ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் தமிழக அரசு பேருந்து மீது திடீரென பாறைகளும் மணலும் சரிந்து விழுந்தது. கொடைக்கானல் மலைப்பாதையில் காய்கறிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஏற்காடு கணவாய் சாலையில் 3ஆவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாதுகாப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் உருண்டது.

திண்டுக்கல் - சிறுமலை பகுதியில் கனமழை பெய்ததால் சாலையோரம் நிறுத்தியிருந்த டிராக்டர் பலத்த சப்தத்துடன் தேயிலை தோட்ட பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது, நல்வாய்ப்பாக அந்த டிராக்டரில் யாரும் இல்லை. இதையடுத்து கிரேன் மூலம் அந்த டிராக்டர் மீட்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+