Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலனால் கர்ப்பம்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் விபரீதம்.. பெற்றோர் தான் காரணமா? போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கூடலூர் நிமினி வயல் பகுதியில் காதலனால் கர்ப்பமடைந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended Video

    கத்தி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட தலைமுடி... ஈரோட்டில் வினோதம்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினி வயல் பகுதியில் வசித்து வருபவர் தேவன். இவரது மனைவி லட்சுமி. கூலித் தெழிலாளர்கள்.

    கணவன் மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் பிரியா( வயது 21). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

     சாவில் சந்தேகம்

    சாவில் சந்தேகம்

    இந்த நிலையில் பிரியாவுக்கு நேற்று முன் தினம் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறி திடீரென அவரது குடும்பத்தினர் பிரியாவை ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஆனால் பிரியாவின் சாவில் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரியாவின் பெற்றோரிடம் கேள்வி கேட்டனர்.

     முன்னுக்கு பின் முரணாக பதில்

    முன்னுக்கு பின் முரணாக பதில்

    ஆனால் அதற்கு பிரியாவின் பெற்றோர் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் குடும்பத்தினர் டாக்டர்களிடம் தெளிவாக கூறவில்லை என தெரிகிறது. இதனால் பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் பிரியாவின் மரணம் தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

     திருமணம் ஆகவில்லை

    திருமணம் ஆகவில்லை

    அப்போது குடும்பத்தினர் தெரிவித்த தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாவது:- பிரியாவுக்கு திருமணம் ஆகாத நிலையில், அவர் 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வைத்துள்ளனர். அப்போது சிசு இறந்து பிறந்துள்ளது. பிரியாவும் அப்படியே மயங்கி விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், ''பிரியாவுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

     போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வருவாய் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கடலூர் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை மற்றும் போலீசார் நேற்று மாலை தேவன் வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலனால் கர்ப்பம் அடைந்த பிரியாவுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+