ஊட்டி ரோட்டுல "அதை" பார்த்தீங்களா? நீலகிரி அசந்துடுச்சு.. கிறங்கடிக்கும் அழகு.. பறைசாற்றும் வாழ்வியல்
நீலகிரி: ஊட்டியே பிஸியாக உள்ளது.. ஒருபக்கம் மழை, கடும் குளிர், ஓயாமல் வீசும் காற்று இவைகளுக்கு நடுவிலும் சுற்றுலா பயணிகளின் வருகை என பரபரப்பாக காணப்படுகிறது நீலகிரி.. இந்நிலையில், ஒரு மகிழ்ச்சி செய்தியும் சுற்றுலா பயணிகளுக்கு வெளியாகி உள்ளது.
பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில், பசுமை நிற ஆடையை தன்மேல் போர்த்திக்கொண்டு, அனைவரையும் தன் அழகில் சுண்டியிழுத்துவிடுகிறாள் மலையரசி.. நீரோடைகளும், புல்வெளிகளும், அருவிகள், வனப்பு மிகுந்த வனப்பகுதிகளும், சிலுசிலு காற்றும், ஜில்லிய குளிரும் என ஒட்டுமொத்த மக்களையும் தன் வனப்பில் கட்டிப்போட்டு விடுகிறாள் இந்த மலைகளின் ராணி.

ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதனை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளும் ஊட்டி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
எழிலார்ந்த இடம்: பொதுவாக பாடல் காட்சிகள் என்றில்லாமல், மற்ற காட்சிகளையும், மலை சார்ந்த சூழலிலே படமாக்கப்படுவது வழக்கம்.. இதற்கு காரணம், "செட்" அமைப்பை காட்டிலும், எழில் சார்ந்த இடங்களே பெரும்பாலும் சினிமாவை வாழவைத்து வருகின்றன. இதில் நீலகிரியும் ஒன்று..!
ஆரம்ப காலத்திலிருந்து, ஸ்டுடியோக்களில் செட் அமைக்கப்பட்டு, ஷூட்டிங் நடத்தினாலும்கூட, நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் ஒரு பாடல் காட்சியாவது படமாக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது..
சினிமாக்கள்: ஸ்பெஷல் படங்கள்இப்போது, 200வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நீலகிரி மாவட்டம்.. இந்த விழாவை கொண்டாடும் வகையில், சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் "ஸ்பெஷல் சினிமா படங்கள்" திரையிடப்பட்டன. இதுவரை ஊட்டியில் ஷூட்டிங் எடுக்கப்பட்ட சினிமா படங்கள் அத்தனையும் இன்று முதல் திரையிடப்பட்டன.
இதோ இதன் இன்னொரு பகுதியாக, ஊட்டி நகரின் சிறப்பை குறிக்கும் வகையிலும், வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஊட்டி நகரின் பல இடங்களில் ஆங்காங்கே சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருரக்கின்றன.. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது எச்பிஎப் (HBF) பூங்கா.. இந்த பூங்காவைதான், கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் செலவில் இப்போது புனரமைத்துள்ளனர். பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கிறது.
சிலைகள்: இந்த பூங்காவில் தோடர் பழங்குடியின மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஆஸ்கர் விருதை அள்ளிய தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற யானை உட்பட வனவிலங்குகளின் சிலைகள், கண்ணை கவரும் விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் என அத்தனையும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் ஊட்டி நகரின் நுழைவுவாயிலான வேலிவியூ பகுதியில், நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது...
பூரிப்பு: இதைத்தவிர, ஹில்பங்க் பகுதியில் உள்ள சாலையோர பூங்காவும் பொலிவுபடுத்தப்பட்டு காட்டெருமை சிலை அமைக்கப்பட்டுள்ளது.. இந்த பணிகள் எல்லாமே முடியும் தருவாயில் உள்ளது. அதனால், விரைவில் இவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என்றும் தெரிகிறது. இதை பார்க்கும் சுற்றுலா பயணிகள் நிச்சயம், இந்த சிலைகளின் அழகில் சொக்கி போவார்கள் என்பது நிச்சயம்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications