நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊட்டியில் இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. தவித்து போன மக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பலத்த மழை பெய்து வருகிறது

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மாலை முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

வட கிழக்கு பருவ மழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மலை மாவட்டமான நீலகிரியிலும் கன மழை கொட்டி வருகிறது.

ஹெவி ரெயின்.. சென்னையில் மீண்டும் வெளுத்து கட்ட போகும் மழை.. வெதர்மேன் அறிவிப்புஹெவி ரெயின்.. சென்னையில் மீண்டும் வெளுத்து கட்ட போகும் மழை.. வெதர்மேன் அறிவிப்பு

 இடி மின்னல்

இடி மின்னல்

ஊட்டியில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.. நேற்றைய தினம், மாலை நேரத்தில் 5 மணிக்கு ஆரம்பித்த மழையானது, இரவு வரை நீடித்தது.. பிறகு மீண்டும் 10 மணிக்கு கனமழை பெய்ய ஆரம்பித்தது.. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கன மழை பெய்தது இதனால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..

 பஸ் ஸ்டாண்டு

பஸ் ஸ்டாண்டு

ஊட்டி மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடாலூர், குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் 4 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த கன மழையால் காந்தள், கீரின்பீல்ட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் நகராட்சி சந்தைக்குள்ளும் மழை நீர் புகுந்தது. பஸ் ஸ்டாண்டு ரோட்டிலும் தண்ணீரில் சிக்கிய வாகனங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மழை

மழை

கன மழையின் காரணமாக சாலைகளால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஊட்டியில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.. உதகை புதுமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து ஜேசிபி வரவழைத்து சாலையில் சரிந்த மண் அகற்றப்பட்டு வருகிறது.. அதபோல, காந்தள் குருசடி காலனி, பென்னட் மார்க்கெட்டில் 300 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது..

ஊழியர்கள்

ஊழியர்கள்

ஊட்டி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் மழைநீரில் சிக்கி கொண்டன.. அதேபோல,படகு இல்ல சாலைகளில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒட்டியுள்ள நடைபாதை கடைமீது கருங்கல் தடுப்பு சுவர் சரிந்து அந்த கடையே முற்றிலும் சேதமாகிவிட்டது. மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Nilgiris district heavy rains in Ooty caused water to seep into many homes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X