ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு - இந்து முன்னணி “பந்த்”.. கடையை திறந்த “ரஹீம்” - கல்வீசிய கும்பலால் பதற்றம்
நீலகிரி: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடைக்கப்படாத கடையின் மீது மர்ம கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்களை இழிவாக பேசியதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னனி சார்பில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் திறந்தும், 50 சதவீத கடைகள் அடைத்தும் வைக்கப்பட்டன. இதற்காக இன்று காலை முதல் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஸ் ராவத் தலைமையில் 850க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

போலீஸ் எச்சரிக்கை
குறிப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடி படையினரும் முக்கிய நகரப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மேலும் திறக்கப்பட்ட கடைகளை மூட வற்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு
இந்நிலையில் பந்தலூர் பஜார் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை வழக்கம் போல் சில வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.

தாக்குதல்
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் திறந்து இருந்த அப்தும் ரஹீம் என்ற நபரின் கடையின் மீது கல்லெறிந்து கடை வியாபாரி மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடை வியாபாரி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது பந்தலூர் வியாபாரிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட ஒரு நபரின் கடையில் கல்லெறிந்து தாக்கப்பட்டது காழ்புணர்ச்சியின் காரணமாகவா அல்லது முன்விரோதமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications