காதல் திருமணங்களை தடுக்கத்தான் பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுகிறது! சொல்வது ஜனநாயக மாதர் சங்கம்
ஊட்டி: பெண்கள் திருமண வயதை உயர்த்த ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அவர்கள் கூறும் காரணம் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் ஜனநாயக மாதர் சங்க பேரவைக் கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயமோள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தலைவர் லீலா வாசு, உரையாற்றினார். பிறகு, ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி கூறுகையில் திருமண வயது தொடர்பான விவகாரம் வந்தது.

ஆய்வு செய்யாத முடிவுகள்
இதோ அவர் கூறியதாவது: அரசு வங்கிகளில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் நேரடிக்கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். பெண்களுக்கு நலன் தரும் பல விஷயங்களை மத்திய அரசு செய்திருக்கலாம். ஆனால், மத்திய பாஜக அரசு அடிப்படையை ஆராயாமல், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 என்று உயர்த்தியுள்ளது.

காரணம் என்ன தெரியுமா
காதல் திருமணம் மற்றும் ஜாதி கலப்பு திருமணத்தை தடுக்கதான், பெண்ணின் திருமண வயதை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதனால் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பெண்களுக்கு ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பேறுகால மரணத்தை தடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. கடந்த ஊரடங்கு காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 7,000 குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக புள்ளி விவரங்கள் உள்ளன. இவ்வாறு சுகந்தி தெரிவித்தார்.

பிரதமர் விருப்பம்
சென்ற வருடம் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அம்சங்களை குறிப்பிட்டு பேசுகையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தார். தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஒரு குழு அமைத்து பரிசீலனை நடத்தப்படும் என அறிவித்தார்.

ஜெயா ஜெட்லி குழு
சென்ற வருடம் ஜூன் மாதத்தில், ஜெயா ஜெட்லி தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வீ.கே. பால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றனர். இந்தக் குழு பல கட்டங்களாக கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வுகளை நடத்தியிருந்தது. அதில், பங்கேற்ற பெரும்பாலானோர், பெண்களின் அதிகாரபூர்வ திருமண வயதை 22 அல்லது 23 ஆக நிர்ணயிக்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

சட்டம் நிறைவேறவில்லை
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற்று, குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications