வெறும் 4 நாள்.. குஜராத்தில் அறுந்த கேபிள் பாலத்தால் 91 பேர் பலி.. விபத்து நடந்தது எப்படி? ஷாக் தகவல்
காந்திநகர்: குஜராத்தில் உள்ள மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 91 பேர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மோர்பி கேபிள் பாலம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த கோர விபத்து நடந்துள்ளதும், பாலத்துக்கு பிட்னஸ் சான்று வழங்கப்படாமல் திறக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் மோர்பி நகரில் மச்சு ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் இருபுறமும் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் ஆற்றின் குறுக்காக கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பிரபலமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் மோர்பி நகருக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அறுந்து விழுந்த பாலம்
இந்நிலையில் தான் இன்று மாலை வழக்கம்போல் கேபிள் பாலத்தில் சுமார் 500 பேருக்கும் அதிகமானவர்கள் சென்றனர். சிலர் பாலத்தில் நின்றபடி ஆற்றிலும் ஓடும் தண்ணீரை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது. இதனால் ஆற்று தண்ணீரில் பலர் மூழ்கினர். இதில் பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர்.

உயிருக்கு போராடிய மக்கள்
இருப்பினும் ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இன்னும் சிலர் அறுந்து தொங்கிய பாலத்தின்பகுதியில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார்கள். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அக்கம்பக்கத்து பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என அனைவரும் திரண்டு வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். முதற்கட்டமாக 100க்கும் அதிகமானவர்கள் ஆற்றுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக தொடங்கியது.

91 பேர் பலி
பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கேபிள் பாலம் அறுந்து விழுந்தது பற்றி அறிந்த அவர் மீட்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதனால் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 91 பேர் பலியாகி உள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனரமைப்பு பணிக்கு பின் திறப்பு
இந்நிலையில் தான் அறுந்து விழுந்த பாலம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பாலம் நீண்ட பாரம்பரியமிக்கது. வரலாற்று பாரம்பரியமிக்க இந்த பாலம் சமீபத்தில் பழுதடைந்தது. இதனால் பாலத்தை புனரமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த பணியை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. குஜராத் புத்தாண்டு கடந்த 26ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டின்போது மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

வெறும் 4 நாளில் கோர விபத்து
வெறும் 4 நாளில் கோர விபத்து புனரமைப்பு பணிக்கு பிறகு கேபிள் பாலம் திறக்கப்பட்ட வெறும் 4 நாட்களிலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் புனரமைப்பு பணி சரியாக மேற்கொள்ளப்படவில்லை. அலட்சியமாக செய்யப்பட்ட பணி, அவசர கதியில் மீண்டும் பாலம் திறக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிட்னஸ் சான்று வழங்காமல் திறப்பு
பிட்னஸ் சான்று வழங்காமல் திறப்பு இதற்கிடையே தான் இன்னொரு ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. மோர்பி நகராட்சி குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்வி ஜாலா கூறுகையில், ‛‛புனரமைக்கப்பட்ட பிறகு கேபிள் பாலத்துக்கான பிட்னஸ் சான்று வழங்கப்படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது'' என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கிடையே தான் விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications