கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி.. பிரான்சில் 3-வது முறையாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்!
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.
பிரான்சில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 41,907 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விடாத கொரோனா தாக்கம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் ஒரு ஆண்டை கடந்தும் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, இந்தியா, பிரேசில் என பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

பிரான்சில் தீயாய் பரவும் கொரோனா
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 41,907 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 303 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நீண்ட நாட்களாக கொரோனா வேகம் எடுத்து வருகிறது.

கட்டுப்பாட்டை இழந்து விடுவோம்
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். ஒரு மாதத்திற்கு இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அவர் அறிவித்தார்.'' இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம்.

தடுப்பூசியே சிறந்த தீர்வு
கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும். மே மாத நடுப்பகுதியில் நாட்டில் சகஜ நிலை திரும்பும் என நம்புகிறேன் என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய இமானுவேல் மேக்ரான் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.