“நாங்க இப்படித்தான் இருப்போம்..” இந்தியாவை விட்டு கொடுக்காத பிரான்ஸ்! அமெரிக்கா டென்ஷன்
பாரிஸ்: சர்வதேச உறவு விஷயத்தில் இந்தியாவுக்கும், எங்களுக்கும் இருக்கும் நிலைப்பாடு ஒன்றுதான் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார்.
இவரின் கருத்துக்களை அமெரிக்கா கவனிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா பஞ்சாயத்தை கிளப்பினால் கூட, இந்தியாவுடன் பிரான்ஸ் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேக்ரோன் சொன்னது என்ன?:
ப்ரஸ்ட்போஸ்ட் (Firstpost) செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மேக்ரோன், “நாளை பாரிஸில் செயற்கை தொழில்நுட்ப (AI) மாநாட்டை என்னுடன் சேர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப இறையான்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து இம்மாநாட்டில் நாங்கள் இருவரும் முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம்.
இருபெரும் வல்லரசு நாடுகளான இந்தியாவும், பிரான்ஸும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. அதேநேரம், சீனாவுடனும் சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறோம். ஆனால் இரண்டில் ஒன்றை மட்டும் நம்பியிருக்க முடியாது. ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், பிரான்ஸும் சேர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
மேக்ரோன் பேச்சின் அர்த்தம் இதுதான்:
இரண்டு விஷயங்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
1.தொழில்நுட்ப இறையாண்மை
2.அமெரிக்க சீனா உறவு
முதல் விஷயத்தை பொறுத்தவரை, சொந்த நாட்டில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களை பாதுகாப்புக்காக பயன்படுத்துவதைத்தான் தொழில்நுட்ப இறையாண்மை என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு இந்திய மக்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆதார் தகவல்களை பாதுகாக்க பெரும்பாலும் வெளிநாட்டின் தொழில்நுட்பங்களைதான் நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு பதில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதுதான் 'தொழில்நுட்ப இறையாண்மைக்கு' அர்த்தமாகும். சுருக்கமாக சொல்வதெனில் மேக் இன் இந்தியா திட்டம் மாதிரி.
அமெரிக்காவை சீண்டும் மேக்ரோன் பேச்சு:
இரண்டாவது விஷயத்தை பொறுத்த அளவில் சர்வதேச அளவில் இந்தியாவும், பிரான்ஸும் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும், அமெரிக்கா மட்டும்தான் கதி என்று இருக்க மாட்டோம் என மேக்ரோன் கூறியிருக்கிறார். சீனாவின் பெயரை குறிப்பிட்டு, அந்நாட்டுடனும் வர்த்தகம் செய்துக்கொள்ள தயார் என பேசியுள்ள அவர், அதீத நெருக்கம் காட்ட மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
இது அமெரிக்காவை சீண்டும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா கந்து வட்டி கொடுக்கும் பைனான்சியர் மாதிரி. ஒருமுறை அங்கு வரவு செலவு வைத்தக்கொண்டால், வேறு யாரிடமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. இப்படி இருக்கும்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்யலாம் என மேக்ரோன் பேசியிருப்பது அமெரிக்காவை சீண்ட தான் செய்யும் என்று கூறுகின்றனர். இருப்பினும் பிரான்ஸ் மூலம் இந்தியாவுக்கு சில காரியங்கள் ஆக வேண்டி உள்ளது.
பாரிஸ் போகும் பிரதமர் மோடி:
இன்றும் நாளையும் பாரிஸில் AI குறித்த மாநாடு ஒன்று நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வு நாளை தொடங்குகிறது. இதனை தொடங்கி வைக்க இன்று பாரிஸ் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணம் மூலம் பிரான்ஸுடன் தொழில்நுட்பம் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் போடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் DeepSeek மற்றும் Chat GPT ஆகியவை தொழில்நுட்ப உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு போட்டியாக இந்தியாவும் இந்த துறையில் வளர வேண்டும். இதற்கு பாரிஸில் நடக்கும் AI மாநாட்டை இந்தியா பயன்படுத்த இருக்கிறது. இந்தியாவின் முயற்சி கைகூடினால் நாமும் தொழில்நுட்ப உலகில் கெத்து காட்டலாம்.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே












Click it and Unblock the Notifications