Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுகில் குத்திவிட்டனர்.. ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கான தூதர்களை உடனடியாக திரும்ப அழைத்த பிரான்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை உடனடியாக திரும்ப அழைப்பதாக பிரான்ஸ் கூறியது. நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததுடன் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. இதனால் பிரான்ஸ் கடும் கோபம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா தங்கள் முதுகில் குத்திவிட்டதாக கொதிப்படைந்துள்ளது.

4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது.

டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் முடிவு செய்திருந்தது . ஆனால் இடையில் புகுந்த அமெரிக்கா, வாருங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்றது.

ஆஸ்திரேலியா ரத்து

ஆஸ்திரேலியா ரத்து

அத்துடன் அணுசக்தி தொழில்நுட்பத்தில் கப்பல்களை தயாரிக்க உதவுவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் தெரிவித்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை அண்மையில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க பிரான்ஸ் உடன் போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார். ரத்து தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

தூதர்களை அழைத்தது

தூதர்களை அழைத்தது

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றுள்ள பிரான்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இருநாடுகளிலும் உள்ள தங்கள் நாட்டு தூதரையும் திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவுறுத்தலின் பேரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன்-யெவ்ஸ் லே ட்ரியன் எழுத்துப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விதிமீறல்

விதிமீறல்

அந்த அறிக்கையில், புதன்கிழமை அன்று அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா செய்து கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம், கூட்டணி நாடுகளுக்கு இடையிலான ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை விதிமீறல். ஏற்கவே முடியாதது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் தன்மை இனி கேள்விக்குள்ளாகி உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டு உடனான உறவில் ஏற்படுத்த போகும் விளைவுகளை அமெரிக்க ஊகிக்கவில்லை .

கடிதம் வந்தது

கடிதம் வந்தது

இந்தியா , சீனா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து வரையிலான கடல் பிராந்தியத்தில் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய மூலோபாயத்தை பிரான்ஸ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தனது திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் தான் வெளியிட்டது. அடுத்த சில நாளிலேயே நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முடிவை அறிவித்து, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் இருந்து பிரான் பிரதமர் மக்ரோனுக்கு கடிதம் வந்திருக்கிறது.

முதுகில் குத்திவிட்டார்கள்

முதுகில் குத்திவிட்டார்கள்

இது தொடர்பாக பிரெஞ்சு அதிகாரிகள் "என்ன நடக்கிறது என்று கேட்க" அமெரிக்காவின் ஆதரவில் உருவாக்க போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அதிகாரிகள். ஒப்பந்தம் குறித்து முழு புரிதலற்ற தன்மையை ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவும் வெளிப்படுத்தி உள்ளன. இதன் மூலம் உண்மையில் எங்கள் முதுகில் குத்திவிட்டனர். நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் நம்பிக்கை உறவை உருவாக்கினோம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் முடிவு

ஏன் முடிவு

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு, பிரான்ஸை கோபம் அடைய வைத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அணுசக்தி கப்பலை ஆஸ்திரேலியாவிற்கு உருவாக்கி தர அமெரிக்கா முன்வந்துள்ளது. இதன் மூலம் அணுசக்தி நாடாக ஆஸ்திரேலியா மாறப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+