பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாரில் நிதீஷைவிட 9 மடங்கு தேஜஸ்விக்கு ஆதரவு அதிகம்! அதகளப்படும் பேஸ்புக்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பழம் பெரும் தலைவரான நிதீஷ் குமாரைவிட நேற்று வந்த லாலுவின் மகன் ஆன தேஜஸ்வி யாதவ்க்கு சமூக ஊடகங்களில் பல மடங்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தியா டுடே டேட்டா இன்டலிஜென்ஸ் யூனிட் லைக்குகளைக் கணக்கிட்டு பார்த்ததில், சராசரியாக, தேஜாஷ்விக்கு நிதீஷை விட ஒன்பது மடங்கு லைக்குகள் கிடைத்தன. நிதீஷ் ஒரு பதிவுக்கு சராசரியாக 5,572 லைக்குகளைப் பெற்றிருந்தாலும், தேஜாஷ்வி ஒரு பதிவுக்கு 51,000 லைக்குகளைப் பெற்றிருக்கிறார்.

பாரம்பரியமாக ஒரு தலைவரின் மதிப்பு அவர் பேரணிகளில் இழுக்கக் கூடிய கூட்டத்தினரால் அளவிடப்படுகிறது. எனினும் இந்த சோஷியல் மீடியா யுகத்தில், சமுக வலைதளத்தில் ஒருவரின் அறிக்கைக்கு பெறும் லைக்குகளும், ஷேர்கள், கமெண்டுகள் உள்பட வரவேற்பும், அவரது அரசியல் அறிக்கைகள் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தும் தாக்கமும் இப்போது முக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது.

இப்போது இதை குறிப்பிட வேண்டிய காரணம் பீகார் தேர்தல். பீகார் அரசியலில் பழம் பெரும் தலைவரான நிதீஷ் குமாரைவிட நேற்று வந்த லாலுவின் மகன் ஆன தேஜஸ்வி யாதவ்க்கு சமூக ஊடகங்களில் பல மடங்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

வேலையில்லை

வேலையில்லை

பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கொரோனா தொற்றுநோய்க்கு நடுவில் நடைபெறுகிறது. அங்கு ஒரு நேரத்தில் வீடு திரும்பிய ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னும் வேலையில்லாமல் உள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்

முதல்வர் வேட்பாளர்கள்

15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய முதல்வர் நிதீஷ் குமார் மற்றொருமுறை முதல்வர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி சார்பில் லாலுபிரசாத் மகன் தேஜஷ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இரு தலைவர்களையும் பேஸ்புக்கில் 15லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள்.

பீகார் தேர்தல் அறிவிப்பு

பீகார் தேர்தல் அறிவிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த நாளான செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 25 வரை இரு தலைவர்களின் பேஸ்புக் பார்வையாளர்களின் தரவை இந்தியா டுடே டேட்டா இன்டலிஜென்ஸ் யூனிட் (டிஐயு) ஆய்வு செய்தது. மேலும் தேஜாஷ்விக்கே பெரிய அளவில் ஆதரவு கிடைத்திருப்பதாக டேட்டாக்கள் காட்டுகின்றன.

அதிக அன்பை பெற்ற தேஜஸ்வி

அதிக அன்பை பெற்ற தேஜஸ்வி

இதன் மூலம் தேஜாஷ்வியின் புகழ் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 25 வரை, நிதீஷ்குமார் 67 பேஸ்புக் பதிவுகள் செய்தார், அது அவருக்கு 3.7 லட்சம் லைக்குகளைப் பெற்றது. அதேநேரம் தேஜாஷ்விக்கு 94 பதிவுகள் மூலம் 47 லட்சம் லைக்குகள் கிடைத்தன. இது தொடர்பாக ஆய்வு செய்த குழு, அவர்களின் அரசியல் பதவிகளை மட்டுமே கணக்கிட்டது., அதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள், இரங்கல், அஞ்சலி போன்றவற்றை கணக்கில் எடுக்கவில்லை.

நிதீஷ்க்கு 5 ஆயிரம் லைக்

நிதீஷ்க்கு 5 ஆயிரம் லைக்

இந்தியா டுடே டேட்டா இன்டலிஜென்ஸ் யூனிட் லைக்குகளைக் கணக்கிட்டு பார்த்ததில், சராசரியாக, தேஜாஷ்விக்கு நிதீஷை விட ஒன்பது மடங்கு லைக்குகள் கிடைத்தன. நிதீஷ் ஒரு பதிவுக்கு சராசரியாக 5,572 லைக்குகளைப் பெற்றிருந்தாலும், தேஜாஷ்வி ஒரு பதிவுக்கு 51,000 லைக்குகளைப் பெற்றருக்கிறார். அதாவது தற்போதைய முதல்வர் நிதீஷை விட ஒன்பது மடங்கு அதிகம். நிதீஷ் தனது போட்டியாளரான தேஜஸ்வியுடன் ஒப்பிடும்போது பேஸ்புக்கில் தாமதமாகவே சேர்ந்துள்ளார் என்பதையும் இந்த டேட்டா காட்டுகிறது

English summary
this poll season, while Nitish Kumar received 5,572 likes per post, Tejashwi Yadav clocked 51,000 likes per post, nine times more than the incumbent Bihar chief minister. Data shows that Nitish was late in logging on to Facebook compared to his rival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X