கதறிய சிறுமி.. கோயிலுக்கு அருகிலேயே.. பலாத்காரம் செய்த கொடூரர்கள்.. சாட்டையை சுழற்றுமா போலீஸ்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தனிப்படையினரை அமைத்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் ஜல்லா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் அருகில் இருக்கும் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல இன்று பள்ளி சென்று திரும்பி இருக்கிறார். அப்போது இவரை யாரோ பின்தொடர்வது போல இருந்திருக்கிறது. இதனையடுத்து சிறுமி வேகமாக நடந்து வந்துள்ளார். ஆனால் அதற்குள் சிலர் சிறுமியின் வாயை பொத்தி கடத்தியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி அவர்கள் பிடியிலிருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளார். கடத்தியவர்கள் சிறுமியை ஜல்லா பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு அருகே ஆட்டோவில் கொண்டு வந்துள்ளனர். கோயிலுக்கு அருகே ஒரு காலி அறை இருந்திருக்கிறது. இந்த அறையில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவளது கை, கால்கள் மற்றும் வாய் அனைத்தும் கட்டப்பட்டிருந்திருக்கிறது. இதனையடுத்து வந்தவர்கள் அனைவரும் அறையைவிட்டு வெளியே சென்றிருக்கின்றனர்.

பலாத்காரம்
பின்னர் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் வந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் வாய் துணி கொண்டு அடைக்கப்பட்டிருந்தாள் அவரால் எதையும் பேச முடியவில்லை. மேலும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி மயங்கி சரிந்துள்ளார். இதனை கண்டு பயந்து போன 5 பேரும் சிறுமியை அதே ஆட்டோவில் வைத்து ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீசி சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து சுயநினைவுக்கு திரும்பிய சிறுமி தனது உடைகளை சரி செய்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் பெற்றோரிடம் நடந்த கொடூரத்தை கூறியுள்ளார்.

புகார்
அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தகவலறிந்த 5 பேரும் அந்த இடத்தைவிட்டு உடனடியாக தலைமறைவாகியுள்ளனர். எனவே அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கோலு குமார், முகேஷ் குமார், பிரமோத் குமார், சுக்ரீவ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவம் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரின் அடையாம் தெரியவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம்
இந்த சம்பவத்தையடுத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பாட்னாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது போன்று கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பது இது ஒன்றும் முதல் முறையன்று. இதற்கு முன்னரும் இதேபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது, சில மாதங்களுக்கு முன்னர் பீகாரின் ஷைாலி மாவட்டத்திலிருந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவரை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேபோல
பின்னர் ஒரு மாதம் கழித்து சிறுமி தனது சொந்த கிராமத்தில் ஒரு இடத்தில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது தான் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டதாகவும். தன்னை டெல்லிக்கு கொண்டு சென்று ஒரு மாத காலம் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications