பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படிச்சேன்! வேலை கிடைக்கல! டீக்கடை ராணியா மாறிட்டேன்! அசத்திய பட்டதாரி பெண்.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் பட்டப்படிப்பு முடித்த நிலையில் வேலை கிடைக்காததால் 24 வயது பட்டதாரி பெண் கல்லூரி அருகே டீக்கடை வைத்து சுயத்தொழிலை துவக்கியுள்ளார்.

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா (வயது 24). 2 தம்பிகள் உள்ளனர். பிரியங்கா குப்தா எக்கனாமிக்ஸில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

5 சம்பவங்கள்.. ஆளுநர் டெல்லி போன நேரம் பார்த்து.. அதிமுக செய்த பெரிய மூவ்.. உற்று பார்க்கும் திமுக! 5 சம்பவங்கள்.. ஆளுநர் டெல்லி போன நேரம் பார்த்து.. அதிமுக செய்த பெரிய மூவ்.. உற்று பார்க்கும் திமுக!

தனியார் பணிகள் கிடைக்காததால் அரசு வேலைக்கு முயற்சி செய்தார். அரசு பணிகளுக்கான தேர்வையும் எழுதினார். ஆனால் அது அவருக்கு சாதகமாக அமையவில்லை. தனியார் வேலையும் கைக்கொடுக்கவில்லை.

டீக்கடை துவக்கம்

டீக்கடை துவக்கம்

இதனால் என்ன செய்வதென்று சிந்தித்தார். சட்டென அவருக்கு வந்த ஐடியா தான் சுயதொழில் துவங்குவது. எந்த தொழில் செய்யாமல் என அவர் தனது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு யோசித்தார். அப்போது தான் டீக்கடை ஆரம்பிக்கலாம் என்பதை அவர் முடிவு செய்தார். இதையடுத்து அவர் பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி முன்பு சிறிய டீக்கடையை துவங்கி உள்ளார். தற்போது 5 வகையான டீ விற்பனை செய்து அசத்துகிறார். வியபாரம் சூடுபிடித்துள்ளது.

பெரிய ஆளாக மாறியவர்கள்

பெரிய ஆளாக மாறியவர்கள்

இதுபற்றி பிரியங்கா குப்தா கூறுகையில், ‛‛நான் 2019ல் பட்டப்படிப்பை முடித்தேன். தனியார் பணி கிடைக்கவில்லை. அரசு வேலைக்கும் முயற்சித்தேன். அதுவும் ஏமாற்றியது. இதனால் ‛ஆத்மநிர்பர் பாரத்' வழியை பின்பற்ற துவங்கினேன். நிறைய பேர் டீக்கடை நடத்தி பெரிய ஆளாக மாறியுள்ளனர். இதனால் நாம் ஏன் டீக்கடை துவங்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து டீக்கடையை துவங்கி விட்டேன். கடையில் ரூ.10 முதல் ரூ.20 வரையில் 5 வகையான டீ வழங்குகிறேன். டீக்கடை துவங்குவதற்கான இன்ஸ்பிரேசனாக பிரபுல் பில்லோர் தான் உள்ளார்'' என்றார்.

உற்சாகமாக இருங்கள்

உற்சாகமாக இருங்கள்

இந்த டீக்கடை அருகே பெரிய சுவரொட்டி உள்ளது. அதில், ‛‛ஆத்மநிர்பர் பாரதத்தை நோக்கிய ஒரு முயற்சியாக இந்த டீக்கடை உங்களை வரவேற்கிறது. டீயை குடிச்சி அன்பு, மகிழ்ச்சியை பரிமாறி உற்சாகமாக இருங்கள்'' என கூறப்பட்டுள்ளது. தற்போது இவரது டீக்கடை தொடர்பான படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதனால் பிரியங்கா குப்தாவை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

ஆத்மநிர்பார் என்றால் என்ன

ஆத்மநிர்பார் என்றால் என்ன

ஆத்மநிர்பர் பாரத் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் ஊக்கப்படுத்தப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்று. அதாவது உள்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரித்து அனைத்து துறை உற்பத்தியை பெருக்குவது தான் இதன் நோக்கமாகும். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது சிறுவயதில் குஜராத் வாட்நகரில் தனது தந்தையின் டீக்கடையில் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
An Economics graduate who has set up a tea stall near a women's college in Bihar's Patna has received encouragement from many on social media. Priyanka Gupta, 24, gave competitive exams and also tried to land a job. But when they did not work out, she said she decided to go the "Aatmanirbhar Bharat (self-reliant India)" way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X