உடல் எடையை குறைங்க.. மோடி அடித்த கமெண்ட்.. சட்டென "வொர்க் - அவுட்டில்" குதித்த தேஜஸ்வி!
பாட்னா: ராஷ்டிய ஜனதாதள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் தற்போது டிவிட்டரில் அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 32 வயதான இவர் தனது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளையும், ஜீப் ஒன்றை தள்ளும் காட்சிகளையும் வீடியோக்களாக வெளியிட்டுள்ளார்.
பீகார் மாநில சட்டமன்றமானது ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனை சிறப்பிக்கும் வகையில் சட்டமன்றத்தில் கடந்த 12ம் தேதி பீகார் பவன் நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது.

மோடி விழா
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். பீகார் மாநிலத்திற்கு கடந்த ஓராண்டுக்கு பின்னர் பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி பயணித்தார். இந்த நிகழ்வில் ராஷ்டிய ஜனதாதள கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தேஜஸ்வி சந்தித்தார். அப்போது மோடி, "உடல் எடையை குறையுங்கள்" என்று தேஜஸ்வியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

உடற்பயிற்சி
இதனையடுத்து தற்போது தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களை தேஜஸ்வி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி அரசியலைக் கடந்து உடற்பயிற்சி ஆர்வலராகவும் பரவலாக அறியப்படுகிறார். 71 வயதான அவர் உடல் நலனை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருக்க யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் தேஜஸ்விக்கு அட்வைஸ் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வீடியோ
இந்த சம்பவத்தையடுத்து தேஜஸ்வி தன்னுடைய வீட்டில் பணியாளர்களுடன் அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதேபோல ஒரு ஜீப்பை ஓட்டுநருடன் சேர்த்து நகர்த்தி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இது அம்மாநில அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரங்களிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேஜஸ்வி
தேஜஸ்வியின் டிவிட்டர் பதிவில், "விளையாட்டோ, வாழ்க்கையோ எப்போதும் வெற்றிபெறவே நாம் விளையாட வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக திட்டமிடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக களத்தில் செயல்படுவீர்கள். ஓட்டுநர், தோட்டக்காரர் என பணியாளர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.1980களுக்கு பின்னர் உலகம் முழுவதும் உடல் எடை குறைவால் உயிரிழப்பவர்களைவிட உடல் எடை அதிகரிப்பால் உயிரிழப்பவர்களே அதிகம் உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எடை கூடுதல்
சமீபத்திய தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, சுமார் 23 சதவீத ஆண்கள் மற்றும் 24 சதவீத பெண்களின் பிஎம்ஐ (உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது) 25 ஆகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ உள்ளது. இது 2015 -16 காலத்தைக் காட்டிலும் இது 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல 3.4 சதவீத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக உடல் எடையுடன் உள்ளனர். இது 2015-16-ல் 2.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications