ஒருநாள் ரெண்டு நாள் இல்லை.. 22 வருசமா இவர் குளிக்கவே இல்லயாம்! காரணம் தெரியுமா?
பாட்னா: சென்னை போன்ற நகரத்தில் ஒரு நாளை கூட நம்மால் நிச்சயம் குளிக்காமல் நகர்த்த முடியாது அல்லது கோடைக்காலங்களில் நிச்சயம் குளிக்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் குளிக்காமல் இருக்கிறார் என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆமங்க பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கதைதான் இது.
பக்தி மார்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பின்னர் தனது குருவின் பேச்சைக் கேட்டு இந்த மனிதர் சுமார் 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் எதுவெனில், இவர் தனது மனைவியின் மறைவின்போதுகூட சடங்குகளுக்கு குளிக்கவில்லை. தனது மகன் ஒருவர் இறந்தபோதும் குளிக்காமல் பிடிவாதமாக இருந்துள்ளார். யாரு சாமி அது? என உங்களுக்கே அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?

தொடக்க வாழ்க்கை
பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைகுந்த்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்தான் தரம்தேவ் ராம். 40 வயதான இவர், கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார். சமீபத்தில் ஒரு தனியார் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இதை குறிப்பிட்டுள்ளார். 1975ல் ஆண்டில் வங்கத்தில் ஜக்தால் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியை தொடங்கியுள்ளார் தரம்தேவ். அவரது வாழ்க்கை இப்படிதான் தொடங்கியுள்ளது. இதனையடுத்து 1978ல் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. எல்லாம் இப்படி இயல்பாக சென்றுகொண்டிருக்கையில் அவருக்கு திடீரென ஒரு சிந்தனை உதித்துள்ளது.

தியானம்
நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருதை அவர் 1987ல் திடீரென உணர்ந்ததாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சரி அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? இங்கேதான் வாழ்க்கையின் அரிய செயலுக்கு தொடக்கப்புள்ளி அமைந்துள்ளது. அதாவது தரம்தேவ் ராம் இந்த சிந்தனையால் ஆட்பட்டதைத் தொடர்ந்து ஒரு சாமியாரை அணுகியுள்ளார். சாமியாரும் தன்னிடம் சீடனாக சேர்ந்து பக்தி மார்கத்தை பின்பற்றுமாறு தரம்தேவிடம் கூறியுள்ளார். தரம்தேவ் ராம் இதனைத் தொடர்ந்து ராமருக்காக தியானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

பக்தி
தொடர்ந்து பக்தி மார்க்கத்தை பின்பற்றியதால் பணியை துறந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் குடும்ப வறுமை, விலைவாசி உயர்வு என பல முனை தாக்குதலை எதிர்கொண்ட அவரது குடும்பம் அவரை மீண்டும் வேலைக்கு துரத்தியுள்ளது. வேறு வழியில்லாமல் அவரும் மீண்டும் தொழிற்சாலைக்கு திரும்பினார். ஆனால் அதற்கு முன்னர் தரம்தேவ் ராம் எடுத்த முடிவு மீண்டும் அவரை பணியிலிருந்து நிரந்தரமாக துரத்தியுள்ளது. அதாவது நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை குறைக்க இறைவனை நோக்கி குளிக்காமல் உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் தியானம் இருந்துள்ளார்.

குளியல்
ஆனால் பணி சூழலுக்கு பட்டிணி ஆகாது அல்லவா எனவே குளிப்பதை மட்டும் நிறுத்திக்கொண்டார். இந்த விஷயம் நாளடைவில் மேனேஜருக்கு தெரிய வரவே தரம்தேவ் ராமை வேலையைவிட்டு துரத்தியுள்ளார். இதனால் மீண்டும் அவர் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் அவரது மனைவி கடந்த 2003ல் இயற்கை எய்திவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பிய தரம்தேவ் ராம் குளிக்கவேயில்லை. அவரை எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட குளிக்க பயன்படுத்தவில்லை.
மேலும், அவரது மகன் ஒருவரும் இதே போல இயற்கை எய்திவிட, அப்போதும் தரம்தேவ் ராம் குளிக்கவில்லை. அந்த அளவுக்கு ராம் கட்டுக்கோப்பாக இருந்துள்ளார். இதில் அந்த ஊர் மக்களை வியப்படைய செய்தது எதுவெனில், தரம்தேவ் ராமுக்கு இதுவரை எந்த உடல்நலக்குறைவும் ஏற்பட்டதில்லை என்பதுதான்.
என்ன மக்களே இப்போ உங்களுக்கு குளிக்கனும்னு தோணுதா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications