பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதுக்குன்னு இப்படியா.. கண்டக்டர் மீது "கை" வைத்து.. ரோட்டோரம் தூக்கி வீசி.. வடமாநிலத்தவர் அக்கிரமம்

டிக்கெட் எடுக்க சொன்னதால் கண்டக்டரை தாக்கி உள்ளனர் 6 பேர்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: அரசு பஸ் கண்டக்டரை வடமாநிலத்தவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கி உள்ளனர்.. இதற்கு காரணம், கண்டக்டர் அவர்களை டிக்கெட் எடுக்க சொன்னாராம்.. கண்டக்டரை போட்டு தாக்கியதை பார்த்து பெரம்பலூர் மாவட்டமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து, பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் வரை இயக்கப்படும் நகரப்பேருந்து ஒன்று நேற்று காலை கிளம்பி உள்ளது.

அந்த கண்டக்டர் பெயர் ஆறுமுகம் .. பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், ஆறுமுகத்துக்கு 50 வயதாகிறது.. இவர்கள் 2 பேருமே அப்போது பணியில் இருந்தனர்..

'முதல்ல கீழே இறங்கு'.. மீனவ பெண்ணை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட கண்டக்டர்.. என்ன நடந்தது? 'முதல்ல கீழே இறங்கு'.. மீனவ பெண்ணை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட கண்டக்டர்.. என்ன நடந்தது?

 வடமாநிலத்தவர்கள்

வடமாநிலத்தவர்கள்

நேற்று மாலை பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது.. சிறுவாச்சூர் கிராமத்தை வந்தடைந்தபோது, வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர் ஏறியுள்ளனர்.. முன்பக்க படிக்கட்டில் மூன்று பேரும், பின்பக்க படிக்கட்டில் மூன்று பேரும் ஏறி கொண்டனர்.. கண்டக்டர் பின்னால் ஏறி கொண்ட 3 பேரிடம் டிக்கெட் எடுக்குமாறு சொன்னார்.. அதற்கு அவர்கள், முன்னாடி ஏறியிருப்பவர்கள் டிக்கெட் எடுத்துவிட்டனர் என்றனர்.. முன்பக்கம் இருந்தவர்களை கேட்டால், பின்பக்கம் இருந்தவர்கள் எடுத்துவிட்டனர் என்றார்கள்.. இப்படி முரண்பாடாக பேசியதில் வாக்குவாதம் தொடங்கி உள்ளது.

 டிக்கெட் காட்டுங்க

டிக்கெட் காட்டுங்க

அவர்களும் வேண்டுமென்றே வம்பிழுத்து, டிக்கெட் எடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.. அதற்குள் அவர்கள் இறங்கும் இடமான விஜயகோபாலபுரம் வந்துவிட்டது.. ஸ்டாப்பிங் வந்தும் கடைசி வரை டிக்கெட் எடுக்காமல் அந்த 6 பேருமே இறங்க முயன்றனர்.. ஆனால் கண்டக்டர் அவர்களை இறங்கவிடவில்லை.. வழிமறித்து டிக்கெட்டை காட்டுங்கள் என்று கேட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும், கண்டக்டரை தாக்கி கீழே தள்ளி உள்ளனர்.

 பதறிய டிரைவர்

பதறிய டிரைவர்

இதில் பஸ்ஸுக்குள் இருந்து கண்டக்டர் ரோட்டோரம் போய் தடுமாறி விழுந்தார்.. அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.. அதற்குள் 6 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.. கண்டக்டர் சாலையில் வீசப்பட்டு ரத்த காயத்துடன் விழுந்ததை கண்டு பயணிகளும், டிரைவரும் பதறிப்போய் அவரை மீட்டனர்.,. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கும் அனுமதித்தனர்.. இப்போது கண்டக்டருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

பரபரப்பு

பரபரப்பு

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேஷ்னில் புகார் தெரிவிக்கப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. பஸ்ஸில் ஏறி தகராறு செய்த 6 பேருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், விஜயகோபலபுரம் பகுதியிலுள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்தது.. இதையடுத்து, 6 பேரில் ஒருவரான அபிநந்தன் குமார்தாஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன்.. இவருடன் பயணித்த மற்ற அனைவரையும் தேடி வருகின்றனர்.

English summary
perambalur north indians attack on government bus conductor and one arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X