தமிழகத்தைத் தொடர்ந்து! புதுவையிலும் பெண்களுக்கு ரூ 5000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
புதுவை: தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 வரவு வைக்கப்படுவதாக அந்த மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகையை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் புதுவையில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அதாவது 21 வயது முதல் 55 வயதுக்குள்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 65 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது.
இதற்காக 6.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த உரிமைத் தொகை ரூ 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதலும் அளித்தார்.
இந்த முறையால் அரசுக்கு கூடுதலாக 9.75 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டது. அது போல் எந்த உரிமைத் தொகையும் பெறாத மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என ரங்கசாமி சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் இல்லத்தரசிகள் பயன்பெறுவர் என சொல்லப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 10 கோடி ரூபாய் செலவாகும் என சொல்லப்பட்டது.
அது போல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ 3000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதை பின்பற்றி புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ 3000 ரொக்கமும், ரூ 750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பும் வழங்கியது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்க இயலாது என்பதால் 3 மாதத்திற்கான உரிமைத் தொகையும் கோடைக்கால நிவாரணமாக ரூ 2 ஆயிரம் சேர்த்து ரூ 5 ஆயிரம் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை புதுவை மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகையை 2 மாதங்களுக்கு முன்பே கொடுக்க அதற்கான நிதியை முன் கூட்டியே வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த சமயத்தில்தான் ஆளுநர் கைலாஷ்நாதன் பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் புதுவையில் 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ 2500 வீதம் மொத்தம் ரூ 5000 வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பணம் ஓரிரு நாட்களில் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிகிறது. சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இந்த 2 மாத தொகை முன்கூட்டியே வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications