போடு தகிட தகிட..புஸ்சிக்கு குஷி! புதுச்சேரியிலும் கால் பதிக்கும் விஜய்! ’அவர்’ கூட தான் கூட்டணியாமே?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இதுவரை நேரடியாக அந்த கட்சி தேர்தலை சந்திக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கட்சி புதுச்சேரியிலும் கால் பதிக்க உள்ளது. அங்கும் நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருக்கும் நிலையில் என்ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கலாம் என கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த கையோடு நிர்வாகிகள் நியமனம், சினிமா ஷூட்டிங் என பிஸியாக இருந்த விஜய், அக்டோபரில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார். அந்த மாநாட்டில் கூடிய இளைஞர் கூட்டம் தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளை திகைக்க வைத்தது என்னவோ உண்மை தான்.

Actor Vijay TVK Puducherry

மற்ற கட்சிகளுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச் செல்லும் நிலையில் விஜய் கட்சிக்கு தாங்களாகவே மக்கள் திரண்டு வந்ததாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக மாநாட்டில் கூட்டணி குறித்து விஜய் பேசியது பல அரசியல் கட்சிகளையும் கவனிக்க வைத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி அமைக்க தயார் என விஜய் வெளிப்படையாக பேசினார். தமிழகத்தை பொறுத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சிக்காக ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கிய சாமி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளனர். தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அல்லது விஜய், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட மூன்றாவது கூட்டணி அமையுமா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் அருகே இருக்கும் புதுச்சேரியிலும் விஜய் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவிலும் அதன் பகுதிகள் இருக்கிறது. ஆனால் பெரும்பகுதி தமிழகத்தை ஒட்டி தான் இருக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் ஆகியவை தமிழகத்தின் சகோதரர்கள் போல தான். புதுச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தான் பிரபலமாக இருந்தது.

அதிலிருந்து விலகிய ரங்கசாமி என்ஆர் காங்கிரசை ஆரம்பித்து தற்போது ஆட்சியை பிடித்துள்ளார். பாஜக - என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அங்கு அதிகாரத்தில் உள்ளது. புதுச்சேரியில் அதிகபட்சம் 45 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட தொகுதி பெரிய தொகுதியாக இருக்கிறது. அதனால் உள்ளூர் பிரபலங்களே அங்கு வெற்றி பெற்று வருகின்றனர். ஒரே தொகுதியில் ஒரே வேட்பாளர் வேறு வேறு கட்சிகளிலும் நின்று வென்ற வரலாறு அங்கு இருக்கிறது.

அதிமுக கூட புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த கட்சி தான். இந்த நிலையில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் புதுச்சேரி அரசியலிலும் கால் பதிக்க திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர் தான். அங்கு அவர் எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். இதனால் புதுச்சேரியில் அந்த கட்சியை வலுப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது.

தனித்து நின்று வெல்லுமா என்ற கேள்வி இருந்தாலும், ரங்கசாமியின் என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியுடன் நல்ல நட்பு உள்ளது. பல நேரங்களில் இருவரும் சந்தித்து பேசியிருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பேசிய ரங்கசாமி கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.இதன் மூலம் புதுச்சேரியில் விஜய் களமிறங்குவது உறுதி தான் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+