அது சரி.. நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்எல்ஏ.க்கள் ஓட்டளிக்க முடியுமா ?
புதுச்சேரி : ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் துணை நிலை கவர்னர் தமிழிசையின் உத்தரவின் பேரில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மாகி, ஏனம் பகுதிகளை சேர்த்து புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 30. இவர்கள் தவிர, மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்எல்ஏ.,க்களை மத்திய அரசால் நியமிக்க முடியும். ஆனால் புதுச்சேரியில் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு பாஜக.,வை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏ.,வாக நியமித்தது.
இவர்களுக்கு சபாநாயகருக்கு பதில் முந்தைய துணை நிலை கவர்னர் கிரண்பேடி பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று, மத்திய அரசின் நியமனம் செல்லும் என தீர்ப்பு கூறப்பட்டது.

4 பேர் ஆதரவு தேவை
காங்கிரஸ் மற்றும் திமுக.,வை சேர்ந்த தலா 2 எம்எல்ஏ.,க்களின் ராஜினாமாவால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் 11 ஆக குறைந்துள்ளது. இவர்களின் சபாநாயகர் சிவக்கொழுந்து நம்பிக்கை ஓட்டெப்பில் பங்கேற்க முடியாது. இதனால் பெரும்பான்மை பலமான 15 எண்ணிக்கையை பெற நாராயணசாமி அரசுக்கு 4 பேரின் ஆதரவு தேவை.

யாரிடம் ஆதரவு கேட்பார் நாராயணசாமி
7 எம்எல்ஏ.,க்களை வைத்திருந்தாலும் எதிர்கட்சி என்பதால் என்ஆர் காங்கிரசிடம் நாராயணசாமி ஆதரவு கேட்க முடியாது. மத்தியில் ஆளும் பாஜக.,வை கடுமையாக எதிர்த்து வருவதால் 3 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள பாஜக.,விடமும் ஆதரவு கேட்க முடியாது. இதனால் நாராயணசாமிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுக தான். அதிமுக.,விடம் 4 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். ஆதரவு அளித்தால் நாராயணசாமி அரசு தப்பும். ஆனால் ஏற்கனவே திமுக.,வுடன் கூட்டணியில் உள்ளதால் அதிமுக.,வின் ஆதரவை கேட்பதிலும் சிக்கல் உள்ளது.

நியமன எம்எல்ஏ.,க்கள் ஒட்டளிக்க முடியுமா
யூனியன் பிரதேச சட்டத்தின் படி நியமன எம்எல்ஏ.,க்கள் சட்டசபையின் உறுப்பினர்கள் மட்டுமே. பாஜக.,வால் நியமிக்கப்பட்டிருந்தாலும், சட்டசபைக்குள் அவர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாததால் நம்பிக்கை ஓட்டெப்பில் பங்கேற்க முடியாது. அப்படி நியமன எம்எல்ஏ.,க்களிடம் ஆதரவு கேட்டால், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, ஆதரவு கேட்பவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

நியமன எம்எல்ஏ.,க்கள் எதற்கு
தாங்கள் சார்ந்த கட்சி அல்லது கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை சட்டசபையில் அரசிடம் முன்வைப்பதற்கு மட்டுமே நியமன எம்எல்ஏ.,க்களுக்கு அதிகாரம் உண்டு. நியமன எம்எல்ஏ.,க்களின் ஓட்டளிக்கும் உரிமை குறித்து யூனியன் பிரதேச சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications