ஒவ்வொரு MLAவுக்கும் 500 கிலோ ஸ்வீட், 500 பாக்ஸ் வெடி.. தீபாவளிக்கு வாரி வழங்கும் புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தலா 500 பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்கள், 500 கிலோ ஸ்வீட் பாக்ஸ்கள் பரிசாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளதால், எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரவுள்ளது. பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் தீபாவளி போனஸ் பெற்றுள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில், எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளிக்கு ஸ்பெஷல் பரிசை அறிவித்துள்ளார் புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி.

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கட்சி சார்பின்றி, அதாவது மொத்தமுள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும், தலா 500 பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்கள், 500 கிலோ ஸ்வீட் பாக்ஸ்கள் பரிசாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பால் அம்மாநில எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எம்.எல்.ஏக்கள், தங்கள் ஆதரவாளர்கள், நெருக்கமானவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் வழங்கிக் கொள்ளும் வகையில் அனைவருக்கும் தலா 500 பட்டாசு பாக்ஸ், 500 ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, எம்.எல்.ஏக்களை மட்டுமின்றி, அவர்களது ஆதரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை மற்றும் அரிசி வழங்குவதற்கு பதிலாக, அதற்கு ஈடான தொகையாக ரூ.490 தீபாவளி பரிசு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 490 ரூபாய் தொகை, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 13ஆம் தேதி புதுச்சேரிக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை கொண்டாட மக்கள் தங்களின் சொந்த ஊர் அல்லது வெளியூர் செல்வார்கள். இதனால் தீபாவளி முடிந்து அவர்கள் உடனடியாக ஊர் திரும்ப முடியாது. இதனால் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று நவம்பர் 13ஆம் தேதியும் அரசு விடுமுறை வழங்கியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications