புதுச்சேரியில் பேக்கரியின் கூரையை பிரிச்ச கொள்ளை கும்பலுக்கு.. கொட்டியது தங்ககாசு.. பணமழை!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் பேக்கரி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் அப்பகுதியில் கடந்த 5 வருடங்களாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் பேக்கரி கடையை நேற்று முன்தினம் பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.

மேலும் மர்ம நபர்கள் கடையின் மேல்கூறையை உடைத்து உள்ளே வந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமிரா பதிவு செய்யும் ஹார்டுடிஸ்கையும் எடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேக்கரி கடையின் மேல்கூறையை உடைத்து உள்ளே சென்று பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications