திருமண வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்.. பணம், நகை அபேஸ்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பெண் ஊழியரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் பிரேமா. இவர் புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் செய்திருந்த நிலையில், இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமண வரவேற்பு விழா அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக பிரேமாவின் குடும்பத்தினர் அனைவரும் திருமணமண்டபத்திற்கு சென்றிருந்தனர்.
வரவேற்பு முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3.50 பவுன் தங்க நகை, மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் ஒரு பகுதியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருப்பதும், அங்கே இருந்த கடப்பாரையை எடுத்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, திருட்டு சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வித்துறை அதிகாரி வீட்டின் மேற்கூரையை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications