புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயசானாலும் அந்த அழகும், ஸ்டைலும் மட்டும் மாறவே இல்லை பாருங்களேன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுசேரியில் நடைபெற்ற அட்டகாசமான கார் அணிவகுப்பு

    புதுச்சேரி: புதுச்சேரி பீச் பக்கம் நேற்று போனீர்களா... போகாதவரா நீங்க.. அடடா அட்டகாசமான ஒரு அணிவகுப்பை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க பாஸ்!

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நடந்தேறியது. இதைக் காண பெரும் கூட்டம் கூடி விட்டது.

    வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். சினிமா படங்கள் மற்றும் புகைப்படங்களில் பார்க்கப்பட்ட பழமையான கார்களை ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.

    பாரம்பரிய கார்கள்

    பாரம்பரிய கார்கள்

    புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார்ஸ் கிளப் இணைந்து பாரம்பரிய கார்கள் அணிவகுப்பை 2010 லிருந்து நடத்தி வருகின்றனர். 9 ஆவது முறையாக நேற்று பாராம்பரிய கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

    பொள்ளாச்சியிலிருந்து 4 கார்

    பொள்ளாச்சியிலிருந்து 4 கார்

    இதில் சென்னையில் இருந்து 60 பாரப்பரிய கார்களும், பொள்ளாச்சியிலிருந்து 4 கார்களும், புதுச்சேரியில் இருந்து 10 பாரம்பரிய கார்களும் மற்றும் 8 பாரம்பரிய மோட்டார் சைக்கிளும் இடம் பெற்றன.

    மயக்கும் மோரிஸ்

    மயக்கும் மோரிஸ்

    முக்கியமாக இதில் 1927 ம் ஆண்டு ஆஸ்டின், 1935 ம் ஆண்டின் மோரிஸ், மேலும் 1946 ம் ஆண்டின் சிட்ரன் உட்பட சிங்கர், பேர்ட் முஸ்டாங், மோரிஸ் மைனர், ஜாகுவார் நிறுவனங்களின் கார்களும் இடம்பெற்றன.

    வாவ் அழகு

    வாவ் அழகு

    கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தும், மகிழ்ந்து பாரம்பரிய பழமையான கார்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

    குடும்ப உறுப்பினர் போல

    குடும்ப உறுப்பினர் போல

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, இதுபோன்று அறிய வகை கார்களை ஒரு சேர பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனை ரசித்து பார்ப்பது மட்டுமல்லாமல் புகைப்படம் எடுப்பதிலும் சந்தோசம் அடைவதாக தெரிவித்தனர். மேலும் கார் உரிமையாளர்கள் கூறும்போது இதனை எங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மக்கள் எங்கள் வண்டியை ரசித்து பார்ப்பதால் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

    English summary
    A Heritage car show was held in Puducherry and hundreds of visitors enjoyed the show.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X