புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்... முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு
புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன் என்றார்.

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி ஒத்துழைப்பு வழங்காது என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசு இராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications