அமித்ஷாவை எதிர்த்து கைதானவர்களின் உணவில் பல்லி! புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி சென்ற நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்தது. இதையடுத்து அந்த உணவை சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நேற்று இரவு சென்னை வந்தார். அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவடி மத்திய ரிசர்வ் படை வளாக விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார்.
இதையடுத்து இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்று தங்கினார்.

புதுச்சேரியில் அமித்ஷா
இதனிடையே இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமித் ஷா இன்று காலை ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்றார். புதுச்சேரியி்ல உள்ள லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு சென்ற அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பூங்கொத்து, சால்வை வழங்கினர். இதையடுத்து அவர் அங்கிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புறப்பட்டார்.

கருப்புகொடி காட்ட முயற்சி
இந்த வேளையில் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியின் சாரம் ஜீவா சிலை அருகே கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சியினர் பதாகைகளுடன் நின்றனர். அதில் Go Back Amit Shah என எழுதப்பட்டு இருந்தன. அத்துடன் கருப்பு கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். அவர்கள் மறுத்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பல இடங்களில் தயாராக இருந்த ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை
முன்னதாக அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்ட முயற்சிப்பதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுச்சேரி தலைவர் ஸ்ரீதர், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் என சிலரை போலீசார் இன்று காலையில் கைது செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.

உணவில் கிடந்த பல்லி
இவர்களுக்கு இன்று மதியம் உணவு வழங்கப்பட்டது. இந்த உணவில் பல்லி செத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலீசாரிடம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவானது கோரிமேடு ஓட்டலில் இருந்து வாங்கி வரப்பட்டது. இதையடுத்து அந்த உணவகம் குறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications