புதுச்சேரி சட்டசபை தேர்தல்... பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய பாமக, முதல்கட்டமாக ஒன்பது பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியிலும் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது, சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன், அங்கு நடைபெற்றுவந்த காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்ததால் கவிழ்ந்தது.

இந்த முறை திமுக-காங்கிரஸ்-விசிக கூட்டணி மீண்டும் புதுச்சேரியில் போட்டியிடுகிறது. அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்த போதிலும், அக்கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. விரைவில் தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றால் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக விலகியுள்ளது. மேலும், முதல்கட்டமாக ஒன்பது பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்றும் புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
மண்ணாடிப்பட்டு - வெங்கடேசன், அரியாங்குப்பம் - சிவராமன், மங்கலம் - மதியழகன், தட்டாஞ்சாவடி -கதிர்வேல், லாஸ்பேட்டை நரசிம்மன், மணவெளி - கணபதி, இந்திரா நகர் வடிவேல், ஊசுடு (தனி)- கலியபெருமாள், திருபுவனை (தனி) - சாண்டில்யன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications