புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'தலைவரா போஸ்டிங் தர்றோம்.. வர்றீங்களா?’ ‘வேற வழி தெரியல’- ஓப்பனாக வலை வீசும் பாஜக.. ஷாக் ஆன கட்சிகள்

Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பாஜக தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், பாஜக தலைவரை காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் வலைவீசித் தேடி வருகின்றனராம்.

புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்த டெல்லியில் இருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு வந்துள்ளது. இதற்காக பாஜக மாநிலத் தலைவரை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவராக நியமிக்கப்படுபவர் செல்வாக்கு மிகுந்தவராகவும், சிறப்பாகச் செயல்படக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பது தலைமையின் எதிர்பார்ப்பாம்.

அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார் எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர்கள் மாற்றுக் கட்சிகளில் தான் இருக்கிறார்கள்.. இனிதான் பாஜகவுக்கு வருவார்கள் எனக் கை காட்டுகிறார்கள் பாஜகவினர்.

பாஜக தேசிய தலைவருக்கே இப்படியா? எச்.ராஜா மொழிபெயர்க்க.. காரைக்குடியில் காத்து வாங்கிய “காலி” சேர்கள்பாஜக தேசிய தலைவருக்கே இப்படியா? எச்.ராஜா மொழிபெயர்க்க.. காரைக்குடியில் காத்து வாங்கிய “காலி” சேர்கள்

புதுச்சேரி அரசியல்

புதுச்சேரி அரசியல்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவில் 6 பேர் தேர்தலில் வென்றனர். 3 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரியில் ரங்கசாமி, பாஜக இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தொகுதிகளில் நடக்கும் பணிகள் கூட தங்கள் தொகுதியில் நடப்பதில்லை என்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவ்வப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனைக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

1 உறுதியாக வேண்டும்

1 உறுதியாக வேண்டும்

இதனால், ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டம் போடுகிறதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது. இதற்கிடையே 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்றியே தீர வேண்டும் என பாஜக கணக்கு போட்டிருக்கிறது. புதுச்சேரி தொகுதியை எப்படியாவது தட்டித் தூக்கி விட வேண்டும் அதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள் என மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.

 மேலிட எதிர்பார்ப்பு

மேலிட எதிர்பார்ப்பு

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் சாமிநாதனின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. புதிய தலைவரை நியமிக்குமாறு டெல்லியில் இருந்து ஆர்டர் வந்தும் கூட இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. காரணம், தனிப்பட்ட செல்வாக்கு மிகுந்தவராகவும், சிறப்பாகச் செயல்படக் கூடியவராகவும் இருப்பவரை நியமியுங்கள், கட்சியை பலப்படுத்த வேண்டும் என மேலிடம் கூறியுள்ளதாம்.

இல்லைனா சேருங்க

இல்லைனா சேருங்க

ஆனால், அப்படி யாரும் இல்லை என கைவிரித்துள்ளது புதுச்சேரி பாஜக. இரண்டு ஆண்டுகளாக தேடியும், புதுச்சேரி பாஜகவில் துடிப்பான இளம் தலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இதுகுறித்து டெல்லிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களோ சிம்பிளாக, நம் கட்சியில் இல்லை என்றால் காங்கிரஸ், அதிமுகவில் இருப்பவர்களை கூப்பிடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

தலைவர் போஸ்டிங்

தலைவர் போஸ்டிங்

மாற்றுக் கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை தூக்குவது போல, பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் ஆட்களை தேட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது புதுச்சேரி பாஜக. புதுச்சேரி பாஜக நிர்வாகிகளும், தகுதி வாய்ந்த ஆட்கள் எனக் கருதும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளிடம், 'கட்சித் தலைவரா போஸ்டிங் தர்றோம்.. வர்றீங்களா?' என ஓப்பனாகவே கேட்டு வலைவீசி வருகிறார்களாம்.

 புதுமுகம்?

புதுமுகம்?

இதனால், காங்கிரஸ், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இதனால் அக்கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், தங்கள் கட்சி நிர்வாகிகளைக் காப்பாற்றப் போராடி வருகின்றனராம். விரைவில் ஏதாவது ஒரு கட்சியில் இருந்தோ, அல்லது புதுமுகம் ஒருவரோ பாஜகவுக்கு இழுக்கப்பட்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

English summary
As the tenure of the Puducherry state BJP president has ended 2 years ago, BJP searching for next president. Puducherry BJP leaders openly spreading net on alternative parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X