ஆரம்பக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்... டெல்லி வரை பரந்து விரிந்த தொடர்புகள்... யார் இந்த செல்வகணபதி..?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் கடும் போட்டிக்கு பிறகு ராஜ்யசபா சீட்டை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் செல்வகணபதி.

புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக உள்ள இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் உள்ளார்.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.

ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.

ஆரம்பக்காலத்தில் தன்னை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் இணைத்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்த செல்வகணபதி, 25 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் இருக்கிறார். இந்துத்துவா கொள்கையில் ஆழ்ந்த பற்றுள்ளவராக இருந்தாலும் மாற்று மதத்தினரிடையே நட்புடன் பழகக்கூடியவர். இதேபோல் கட்சியிலும் தனது தொடர்புகளை நாக்பூர், டெல்லி என பரந்து விரிந்து வைத்திருப்பவர்.

கல்வி நிறுவனங்கள்

கல்வி நிறுவனங்கள்

புதுச்சேரியில் செல்வகணபதிக்கு சொந்தமாக நிறைய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவருக்கு கல்வியாளர் என்ற முகமும் புதுச்சேரியில் உண்டு. கட்சி நிதியின் வரவு செலவு கணக்குகளில் நாணயமாக நடந்து கொள்ளக்கூடியவர். எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியினர் கஷ்டம் என்று வந்து நின்றால் மறுப்பு சொல்லாமல் உதவக்கூடியவர். இதனாலேயே இவருக்கான உட்கட்சி ஆதரவு வட்டம் புதுச்சேரி பாஜகவில் அதிகம்.

முதல்முறை

முதல்முறை

ஐசரி கணேஷ், ஜி.என்.எஸ்.வாசு, போன்றோர் இப்பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டிய நிலையில் தனது பழைய நாக்பூர் தொடர்புகள் மூலம், இவ்விவகாரத்தை மிக லாவகமாக கையாண்டு ராஜ்யசபா வேட்பாளர் ரேஸில் ஜெயித்துவிட்டார் செல்வகணபதி. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்படவுள்ளார். புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவர் ராஜ்யசபா எம்.பி.யாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி ஆட்சி

கூட்டணி ஆட்சி

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் 10 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவில் 9 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கடுமையாக போராடியும் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பாஜக தேசியத் தலைமை பிடிதளர்த்தவில்லை. இதனிடையே ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதிக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த கட்சியினர் கூறிய வாழ்த்துக்களை விட வடக்கிலிருந்து அவருக்கு வந்த வாழ்த்துகள் தான் ஏராளம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+