இந்த காலத்திலும் இப்படியா? கைலி, பனியனுடன் மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. வியந்து பார்த்த மக்கள்
புதுவை: புதுவை முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், சாதாரண தொழிலாளி போல கைலி, பனியனுடன் மூட்டை தூக்கி வேலை செய்யும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
புதுவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் கமலக் கண்னன். ஒருமுறை கவுன்சிலர் ஆகிவிட்டாலே கார், பங்களா என பவனி வரும் இந்த காலத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவர், சாதாரணமாக கைலி அணிந்து கொண்டு கூலி வேலை செய்து வருவது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

காரைக்காலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்னன் தற்போது மிக எளிமையாக மூட்டை தூக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
புதுவையில் கடந்த 2016-21 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. நாராயணசாமி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் கமலக்கண்ணன். அப்போதே மிகவும் எளிமையான அமைச்சராக கமலக்கண்ணன் அறியப்பட்டுள்ளார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் மாவட்டம் அம்பாகரத்தூரில் உள்ள தனது வயலில் நெல் நடவுப் பணிக்காக மண்வெட்டியை எடுத்துச் சேற்றில் இறங்கி வேலை செய்த காட்சிகள் கடந்த 2021ல் வைரலானது. அப்போது புதுவை மாநில ஆளுநராக கிரண் பேடி இருந்தார். ஆளும் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த கிரண்பேடி, கமலக்கண்னன் வயலில் இறங்கி வேலை செய்ததை பாராட்டியிருந்தார்.
"வேளாண்துறை அமைச்சர் பொறுப்பில் தகுதியுள்ள சரியான ஒருவர் இருக்கிறார்" எனக் கூறியிருந்தார். தற்போது புதுவையில் என். ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சரான கமலக்கண்ணன் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளார். அதாவது, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கைலி, பனியனை அணிந்து கொண்டு மூட்டையை சுமந்து செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஒருவர் இவ்வளவு எளிமையாக இருப்பதை பார்த்து வியப்புடன் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நெட்டிசன்கள் கூறும் போது, ஒருமுறை கவுன்சிலர் ஆகிவிட்டால் கூட கார், பங்களா என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருவதை பார்க்கக் கூடிய தற்போதைய கால கட்டத்தில் முன்னாள் அமைச்சராக இருந்து இவ்வளவு எளிமையாக உள்ளாரே?.. என்று வியப்புடன் பதிவிட்டு வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications